Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தை

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (20:08 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 80 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 58.90 புள்ளிகள் அதிகரித்தது.

இன்று மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 116.33 புள்ளிகள் உயர்ந்த்திருந்தது. ஒரு நிலையில் 277 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 20,484.28 புள்ளிகளாக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி ஒரு நிலையில் 88 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 6,167.75 புள்ளிகளாக உயர்ந்தது.
இந்த வருடத்தில் சென்செக்ஸ் 47 விழுக்காடும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 53 விழுக்காடும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 பங்குகளில் 15 பங்குகளின் விலைகள் அதிகரித்தன. 15 பங்குகளின் விலைகள் குறைந்தன. மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப், சுமால் கேப் குறியீட்டு எண்கள் இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு அதிகரித்தது. இன்று மும்பை பங்குச் சந்தையில் ரூ.9,448 கோடி மதிப்பிற்கு வர்த்தகம் நடந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 2,496 பங்குளின் விலைகள் அதிகரித்தன. 387 பங்குகளின் விலைகள் குறைந்தன. 17 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் பங்கு விலைகள் 5.37 விழுக்காடும், வாகனம் பிரிவு 1.29 விழுக்காடு, ரியல் எஸ்டேட் 1.40 விழுக்காடு, மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலைகள் 1.25 விழுக்காடு அதிகரித்தன. வங்கி பிரிவில் உள்ள பங்கு விலைகள் சிறதளவே அதிகரித்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்தன.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் எல்.அண்ட்.டி., ரான்பாக்ஸி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, டி.எல்.எப்., ஹின்டால்கோ, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, டி.சி.எஸ்., ஏ.சி.சி., பார்தி ஏர்டெல், என்.டி.பி.சி., ஒ.என்.ஜி.சி., டி.சி.எஸ்., பி.ஹெச்.இ.எல்., கிராசிம் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

சத்யம், எஸ்.பி.ஐ., அம்புஜா சிமென்ட், சிப்லா, ஹெச்.டி.எப்.சி., ஹெச்.டி.எப்.சி. வங்கி, ரிலையன்ஸ் எனர்ஜி, இன்போசியஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், விப்ரோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அமைச்சர் மகளுக்கு பாலியல் சீண்டல்.. ஏழு பேர் மீது வழக்குப்பதிவு..!

அதிக வெப்பம்.. 12-3 மணி வரை வெளியே வர வேண்டாம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வாலிபர்.. எலி மருந்து கொடுத்த காதலி..!

அச்சமும், பதற்றமும் இல்லாமல், துணிச்சலுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். கமல்ஹாசன்

மிகப்பெரிய சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. நம்பிக்கை இல்லாத முதலீட்டாளர்கள்..!

Show comments