Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை 621 புள்ளிகள் உயர்வு!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (14:15 IST)
மும்பை பங்குச் சந்தையில் மதியம் 2 மணியளவில் சென்செக்ஸ் 621.14 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 19,783.71 புள்ளிகளாக உயர்ந்தது.

இதே போல் மிட்கேப் 184.73, சுமால் கேப் 172.25, பி.எஸ்.இ-500 217.72 புள்ளிகள் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 180.35 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5946.85 ஆக உயர்ந்தது.

அத்துடன் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்து இருந்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி., அம்புஜா, கிரேசம், ஹெச்.டி.எப்.சி. வங்கி, ஹின்டால்கோ, மகேந்திரா அண்ட் மகேந்திரா, சத்யம், எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, பார்தி ஏர்டெல், பி.ஹெச்.இ.எல், ஐ.டி.சி, என்.டி.பி.சி,, ஓ.என்.ஜி.சி,, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, சிப்லா, ரான்பாக்ஸி, ஹெச்.டி.எப்.சி,, ஐ.டி.சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டி.சி.எஸ்,, ஹிந்துஸ்தான் யூனிலிவர், பி.ஹெச்.இ.எல்,, ஐ.சி.ஐ.சி.ஐ, வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தது.

பஜாஜ் ஆட்டோ, மாருதி ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்தன.

கிறிஸ்தும்ஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. அந்நிய முதலீட்டாளர்கள் விடுமுறை காலங்களில் வர்த்தகத்தில் ஈடுபட அதிக அளவு ஆர்வம் காண்பிக்க மாட்டார்கள். எனவே ஆண்டு இறுதி வாரத்தில் பங்குச் சந்தை விறுவிறுப்பாக இருக்காது என கருதப்பட்டது. ஆனால் ஆண்டின் கடைசி வாரத்தின் முதல் நாளிலேயே எல்லா பங்குச் சந்தைகளிலும் ஆர்வம் அதிகளவு இருந்தது. இன்று இதே நிலை தொடரும் என்று வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்திய பங்குச் சந்தை மட்டுமின்றி அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன. ஹாங்காங்கின் ஹாங் சங் குறியீட்டு எண் 1.82 விழுக்காடு அதிகரித்து குறியீட்டு எண் 28,128.80 புள்ளிகளை தொட்டது.

இதே போல் தைவானின் குறியீட்டு எண் 133 புள்ளிகள் அதிகரித்தது. அமெரிக்க பங்கச் சந்தைகளிலும் பங்கு விலைகள் அதிகரித்தன. இவற்றின் குறியீட்டு எண்களும் உயர்ந்தன.

இன்று வர்த்தகம் தொடங்கிய போது மும்பை பங்குச் சந்தையிலும் தேசிய பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 422.46 புள்ளிகள் அதிகரித்து குறியீ்ட்டு எண் 19,585.03 புள்ளிகளை தொட்டது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் தொடர்ந்து எல்லா பிரிவு பங்குளின் விலைகளும் அதிகரித்த வண்ணம் இருந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments