Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் ஏற்றம்!

Webdunia
புதன், 19 டிசம்பர் 2007 (12:25 IST)
மும்பை தேசிய பங்குச் சந்தைகளில் கடந்த நான்கு நாட்களாக நிலவி வந்த நிலைமை இன்று மாறியது!

காலையில் வர்த்தகம் தொடங்கியபோதே பங்கு விலைகள் அதிகரித்தன. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 318 புள்ளிகள் அதிகரித்தது. இதன் குறியீட்டு எண் 19,397.76 ஆக அதிகரித்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையி்ன் நிஃப்டி 98.50 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,840.80 ஆக உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாமல் மற்ற நாட்டு பங்குச் சந்தைகளிலும் பங்குவிலைகள் அதிகரித்தன.

அமெரிக்க பங்குச் சந்தையின் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. அமெரிக்காவின் பொருளாதார சிக்கலை தீர்வு காண ஐரோப்பா மத்திய வங்கி 500 பில்லியன் டாலர் குறுகிய கால கடனாக அமெரிக்க வங்கிகளுக்கு கொடுப்பதாக அறிவித்தது.

இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் நிலவிவந்த பின்னடைவில் மாற்றம் ஏற்பட்டது. இதே போல் ஆசியாவின் மற்ற பங்குச் சந்தைகளிலும் கடந்த இரண்டு நாட்களாக நிலவி வந்த மந்தப்போக்கில் இன்று மாற்றம் காணப்பட்டது.

ஜப்பானின் நிக்கி 0.28 விழுக்காடு, சிங்கப்பூர் ஸ்டெய்ர்ட் டைம்ஸ், ஹாங்காங்கின் ஹாங் சங் ஆகியவற்றின் குறியீட்டு எண்கள் தலா 0.90 விழுக்காடு அதிகரித்தன.

காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 176.31 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 19,255.95 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 54.50 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5796.80 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட்கேப் 206.60, சுமால் கேப் 360.32,பி.எஸ்.இ-500 114.88 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

தேசிய பங்குச் சந்தையின் மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் 0.63 முதல் 2.04 விழுக்காடு வரை அதிகரித்து இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் எஸ்.அண்ட்.டி,அம்புஜா சிமென்ட்,சிப்லா,ஹெச்.டி.எப்.சி வங்கி,மகேந்திரா அண்ட் மகேந்திரா,டாடா ஸ்டீல்,பி.ஹெச்.இ.எல்,ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி,டி.எல்.எப்,இன்போசியஸ்,என்.டி.பி.சி,ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஒ.என்.ஜி.சி, சத்யம், டாடா மோட்டார்ஸ், சிப்லா, ஹின்டால்கோ,எஸ்.பி.ஐ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்து இருந்தது.

விப்ரோ, ஏ.சி.சி, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எப்.சி, மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்து காணப்பட்டது.
இன்று நேற்று போல் அதிகளவு பங்குவிலை குறையாது என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments