Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை சென்செக்ஸ் 769 புள்ளி சரிவு!

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2007 (18:52 IST)
மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையும் இன்று கடுமையான சரிவைச் சந்தித்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே இரண்டு பங்குச் சந்தைகளின் எல்லா பிரிவு பங்குகளின் விலையும் இறங்கு முகமாகவே இருந்தது. இவைகளின் குறியீட்டு எண்கள் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தன.

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் (சென்செக்ஸ்) 769.48 புள்ளிகள் சரிந்து 19,261.35 ஆக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 270.70 புள்ளிகள் சரிந்து 5,777 ஆக குறைந்தது.

உலோக நிறுவனங்கள், இயந்திர உற்பத்தி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தன.
இதே போல் பொதுத்துறை நிறுவனங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள், வங்கி, மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலையும் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 366.36, சுமால் கேப் 355.48, பி.எஸ்.இ-500 358.36 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் 2 முதல் 5 விழுக்காடு வரை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி.,அம்புஜா சிமென்ட், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி., மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, சத்யம், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் என்ர்ஜி, ஹெச்.டி.எப்.சி., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், கிராசிம், ஹெச்.டி.எப்.சி. வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பி.ஹெச்.இ.எல்., சிப்லா, ஹின்டால்கோ, இன்போசியஸ், எல்.அண்ட்.டி.,
டி.எல்.எப்., என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

ஹிந்துஸ்தான் யூனிலிவர் பங்கு விலை மட்டும் அதிகரித்தது.













எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments