Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2007 (14:31 IST)
பங்குச் சந்தைகள் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சரிவை சந்தித்தன.

மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே குறியீட்டு எண்கள் சரிந்தன. மும்பையின் சென்செக்ஸ் 137.41 புள்ளிகள் சரிந்து 19,893.83 ஆக குறைந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 69.30 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 5,978.40 ஆக குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் மட்டுமல்லாது ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 20.46 புள்ளிகளும், ஹாங்காங் பங்குச் சந்தையின் ஹாங் சங் 443 புள்ளிகளும் குறைந்தன. இதே போல் அமெரிக்க பங்குச் சந்தையும் சரிவை சந்தித்தது.

மும்பை பங்குச் சந்தையில் மதியம் 2 மணியளவில் சென்செக்ஸ் 402.41 புள்ளிகள் குறைந்து 19,628.42 ஆக சரிந்தது. இதே போல் மிட்கேப் 91.44 பி.எஸ்.இ-500 160.00 புள்ளிகள் குறைந்தன. அதே நேரத்தில் சுமால் கேப் பிரிவு மட்டும் அதிகளவு பாதிக்கப்படவில்லை. இதன் குறியீட்டு எண் 39.65 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 6 ஆயிரத்துக்கும் குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 185.70 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,862.00 ஆக குறைந்தது. மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பார்தி ஏர்டெல், கிராசிம், மாருதி, என்.டி.பி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் எனர்ஜி, ஹெச்.டி.எப்.சி.,இன்போசியஸ், ஹெச்.டி.எப்.சி வங்கி, ரான்பாக்ஸி, எஸ்.பி.ஐ., விப்ரோ, பி.ஹெச்.இ.எல்., டி.எல்.எப்., ஹின்டால்கோ, டி.சி.எஸ்.ஏ.சி.சி, அம்புஜா, ஐ.டி.சி., எல்.அண்ட்.டி., மகேந்திரா அண்ட் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, சத்யம் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

சிப்லா, ஹிந்துஸ்தான் யூனிலிவர்,ஐ.டி.சி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments