Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை 360 புள்ளிகள் உயர்வு!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (19:10 IST)
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் முதன் முதலாக 20 ஆயிரத்தை தாண்டியது. இன்று சென்செக்ஸ் 360.21 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 20,290.89 புள்ளிகளாக முடிந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 136.65 புள்ளிகள் அதிகரித்து 6097.25 புள்ளிகளாக முடிந்தது.

இன்று காலையில் இருந்தே இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலைகள் அதிகரித்தன. நேற்று முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து இலாபம் பார்த்தன. இதனால் பங்குகளின் விலைகள் குறிப்பாக சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளின் விலை குறைந்தது. ஆனால் இன்று இதற்கு நேர்மாறாக அந்நிய முதலீட்டு நிறுவனங்களும், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் பங்குகளை வாங்கின. இதனால் எல்லா பிரிவு பங்குகளின் விலையும் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 59.54, சுமால் கேப் 136.92, பி.எஸ்.இ-500 120.18 புள்ளிகள் அதிகரித்தன. தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு பங்குகளின் விலையும் அதிகரித்ததால், இவைகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஐ.டி.சி, எல்.அண்ட்.டி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, சத்யம், எஸ்.பி.ஐ., விப்ரோ, ஏ.சி.சி., பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, என்.டி.பி..சி., ஓ.என்.ஜி.சி., டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், சிப்லா, கிராசிம், ஹின்டால்கோ, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், சிப்லா, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

அம்புஜா சிமென்ட், டி.எல்.எப்., இன்போசியஸ், ரிலையன்ஸ் எனர்ஜி ஆகியவற்றின் பங்கு விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments