Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் ஏற்றம்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (11:24 IST)
மும்பை தேசிய பங்குச் சந்தைகளில் நேற்று இருந்த போக்கு மாறியது. இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ், நிஃப்டி உட்பட எல்லா பிரிவு பங்குளின் விலையும் அதிகரித்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கிய 10வது நிமிடத்தில் சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளை தாண்டி, 20,061.05 புள்ளிகளாக உயர்ந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 130.37 புள்ளிகள் அதிகம்.

இதே போல் தேசிய பங்கச் சந்தையில் நிஃப்டி நேற்றைய இறுதி நிலவரத்தை விட 68 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 6 ஆயிரத்தை தாண்டி 6028.50 புள்ளிகளாக உயர்ந்தது.
அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை கால் விழுக்காடு குறைக்க போகிறது.

இதற்கான அறிவிப்பு இன்று இரவு வெளியிடப்படும். இதனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ஆசிய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. இதன் காரணமாக இந்திய பங்கு‌ச் சந்தை உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரிப்பதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.

அமெரிக்க பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலை அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 277.86 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 20,168.54 ஆக உயர்ந்தது.

இதே போல் மிட் கேப் 125.56, சுமால் கேப் 200, பி.எஸ்.இ-500 106.95 புள்ளிகள் உயர்ந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 88.60 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 6048.20 ஆக உயர்ந்தது. எல்லா பிரிவு பங்குகளின் விலையும் அதிகரித்தது.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, எஸ்.பி.ஐ, டி.சி.எஸ், விப்ரோ, ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, எல்.அண்ட்.டி, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, பார்தி ஏர்டெல், பி.ஹெச்.இ.எல், என்.டி.பி.சி, ஒ.என்.ஜி.சி, பஜாஜ் ஆட்டோ, கிரேசம், ஹின்டால்கோ, சத்யம், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், சிப்லா, ஹிந்துஸ்தான் யூனிலிவர், டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

இன்போசியஸ் நிறுவனத்தின் பங்கு விலை மட்டும் குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments