Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2007 (12:05 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே விறு விறுப்பாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் ஆரம்பித்த ஐந்து நிமிடத்தில் 267.63 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 20,063.50 ஆக அதிகரித்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 85.10 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 6,039.80 புள்ளிகளை தொட்டது.

காலை 10.45 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 19,910.90 புள்ளிகளாக குறைந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 115.03 புள்ளி அதிகம். இதே போல் மிட்கேப் 62.89 (குறியீட்டு எண் 9,096.65 ) சுமால் கேப் 115.91 (குறியீட்டு எண் 11,476.64 ), பி.எஸ்.இ-500 52.88 (குறியீட்டு எண் 8234.80 )புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃடி 25.93 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5980.65 புள்ளிகளாக இருந்தது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நேற்று நெருக்கடியில் உள்ள அமெரிக்க பொருளாதார‌த்‌தி‌ற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியவர்கள் திருப்பி செலுத்தாத காரணத்தினால், வங்கி, நிதி நிறுவனங்களுக்கு மறு ஈட்டு கடன் வழங்கிய நிதி நிறுவனங்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது.

இதை ஈடுகட்டும் வகையில் வீட்டிற்கான கடனை திருப்பி செலுத்த முடியாதவர்களுக்கு கடனுக்கான வட்டி தள்ளுபடி உட்பட சில சலுகைகளை அறிவித்துள்ளார்.

இதனால் அமெரிக்க பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இன்று இதன் தாக்கம் ஆசிய நாட்டு பங்கு சந்தைகளிலும் எதிரொலித்தது.

ஜப்பானின் நிக்கி 1.23 விழுக்காடு, ஹாங்காங்கின் ஹாங்-சங் 0.74 விழுக்காடு, சிங்கப்பூரின் ஸ்ரெய்ட் டைம்ஸ் 1.68 விழுக்காடு அதிகரித்தன. இதே போல் இந்திய பங்குச் சந்தைகளிலும் பங்கு விலைகள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் எல்.அண்ட்.டி., மாருதி, ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டாடா ஸ்டீல், விப்ரோ, அம்புஜா சிமென்ட்,ஐ.டி.சி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

ஏ.சி.சி., பார்தி ஏர்டெல், சிப்லா, பி.ஹெச்.இ.எல்., ஹின்டால்கோ, இன்போசியஸ், மமேந்திரா அண்ட் மகேந்திரா, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்து இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments