Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை 76 புள்ளிகள் சரிவு!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (19:14 IST)
மும்பை பங்குச் சந்தைக் குறியீடு (சென்செக்ஸ்) 76.30 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீடு (நிஃப்டி) 42 புள்ளிகள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும போது 141 புள்ளிகள் உயர்ந்து இருந்தது. காலையில் இருந்தே பங்குகளின் விலை குறைந்தததால் ஒரு நிலையில் சென்செக்ஸ் 419.79 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 18,812.83 புள்ளிகளாக சரிந்தது.

இதேபோல தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் நிஃப்டி47 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,608.65 புள்ளிகளை தொட்டது. இறுதியில் நிஃப்டியும் 42 புள்ளிகள் குறைந்து 5,519.35 புள்ளிகளில் முடிந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட்கேப் 127 புள்ளிகளும், சுமால் கேப் 204.36 புள்ளிகளும், பி.எஸ்.இ-500 50 புள்ளிகளும் குறைந்தன.

மும்பை சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் சிப்லா, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஹின்டால்கோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், சத்யம், எஸ்.பி,ஐ, டாடா மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ, பார்தி ஏர்டெல், சத்யம், டி.சி.எஸ், விப்ரோ, ஐ.டி.சி, ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

பி.ஹெச்.இ.எல், டி.எல்.எப், ஹெச்.டி.எப்.சி, இன்போசியஸ், எல்.அண்ட்.டி, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், கிராசிம், ஹிந்துஸ்தான் யூனிலிவர், என்.டி.பி.சி, ஒ.என்.ஜி.சி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments