Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (11:54 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது சிறிது நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருந்தது. ஆனால் ஐந்து நிமிடத்திலேயே நிலைமை மாறியது.

காலையில் சென்செக்ஸ் 142 புள்ளிகள் அதிகரித்தது. நிஃப்டி 44 புள்ளிகள் அதிகரித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிய ஆரம்பித்தன. பங்குகளின் விலை ஏற்ற இறக்கமாக இருந்தது.

காலை 11 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 19.53 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 18,583.09 புள்ளிகளாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மற்ற பிரிவுகளான மிட்கேப் 98.12 புள்ளிகள் குறைந்து 8119.72 புள்ளிகளாகவும், சுமால் கேப் 150.56 புள்ளிகள் குறைந்து 10,114.67 புள்ளிகளாகவும், பி.எஸ்.இ-500 0.46 புள்ளிகள் குறைந்து 7490.06 புள்ளிகளாக இருந்தது.

இன்று பங்குகளின் விலை ஏற்ற இறக்கமாக இருப்பதாக தரகர்கள் தெரிவித்தனர். இந்த நிலை மாறலாம் என்ற கருத்து பங்குச் சந்தை வட்டாரங்களில் நிலவுகிறது.

கடந்த மூன்று வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் 1,096 புள்ளிகள் குறைந்துள்ளது. மற்ற பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் குறைந்துள்ளன. இதனால் பங்குச் சந்தைகளில் உள்ள பங்குகளின் மொத்த மதிப்பில் ரூ. 4 லட்சத்து 13 ஆயிரம் கோடி மதிப்பு குறைந்துள்ளது.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எப்.சி வங்கி, மாருதி, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், விப்ரோ, ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட், பி.ஹெச்.இ.எல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எஸ்.பி.ஐ, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல்,. சிப்லா, கிரேசம், ஹின்டால்கோ, டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்து இருந்தது.

எல்.அண்ட.டி, என்.டி.பி.சி, ஒ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டி.எல்.எப், ஹெச்.டி.எப்.சி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, சத்யம், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனறங்களின் பங்கு விலை குறைந்து காணப்பட்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

பாலியல் வன்கொடுமைகள் விவகாரம்: தமிழக பெண்களுக்கு விஜய் எழுதிய கடிதம்..!

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

Show comments