Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் 86 புள்ளி சரிவு!

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2007 (17:59 IST)
மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 182 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 19,603.09 புள்ளிகளாக குறைந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும் 18 புள்ளிகள் குறைந்து 5012.10 புள்ளிகளாக குறைந்தது. இன்று நாள் முழுவதும் பங்குகளின் விலை ஏற்ற இறக்கமாக இருந்தது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 86.53 புள்ளிகள் குறைந்து 19,698.36 புள்ளிகளில் முடிந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 6 புள்ளிகள் குறைந்து 5,906.85 புள்ளிகளில் முடிந்தது.

இன்று பங்குகளின் விலை குறைந்தாலும் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விலை குறையவில்லை. இவற்றில் சில நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறைந்தாலும் மற்ற பிரிவுகளான மிட்கேப் 98.29 புள்ளிகளும், சுமால் கேப் 153.07 புள்ளிகளும், பி.எஸ்.இ-500 15.32 புள்ளிகளும் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜூனியர், பாங்க் நிப்டி. சி.என்.எக்ஸ் 100, சி.என்.எக்ஸ் 500, மிட் கேப், மிட்கேப் 50 ஆகிய பிரிவுகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஐ.டி.சி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், விப்ரோ, அம்புஜா சிமென்ட், கிரேசம், டாக்டர் ரெட்டி, ஹூந்துஸ்தான் யூனிலிவர், ஒ.என்.ஜி.சி, எஸ்.பி.ஐ, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல் டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தன.

ஹெச்.எப்.டி.சி வங்கி, எல் அண்ட் டி, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, ஏ.சி.சி, பி.ஹெச்.இ.எல், ஹெச்.டி.எப்.சி, என்.டி.பி.சி, சத்யம், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments