Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் இறக்கம்!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2007 (12:13 IST)
பங்குச் சந்தையில் நேற்று இருந்த நிலைமை மாறி பங்குகளின் விலைகள் குறைந்தது. இதனால் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறைந்தன.

முதலீட்டு நிறுவனங்கள் இலாபம் சம்பாதிப்பதற்காக பங்குகளை விற்பனை செய்யதால் விலைகள் குறைந்ததாக புரோக்கர்கள் தெரிவித்தனர்.

மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, நேற்றைய இறுதி நிலவரத்துடன் சென்செக்ஸ் 161.08 புள்ளிகள் குறைந்து இருந்தது. ஆனால் அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 23.80 புள்ளிகள் அதிகரித்தது.

ஆனால் காலை 11.30 மணியளவில் இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலைகள் குறைய ஆரம்பித்தன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 114.80 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 19,814.18 புள்ளிகளாக குறைந்தது..
மற்ற பிரிவு பங்குகளின் விலை குறையவில்லை. மிட் கேப் 118.52 புள்ளிகள், சுமால் கேப் 173.70 புள்ளிகள், பி.எஸ்.இ. 500.26 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 10.65 புள்ளிகள் குறைந்து 5,927.90 ஆக குறைந்தது. தேசிய பங்கு சந்தையிலும் மிட் கேப், மிட் கேப் 50, சி.என்.எக்ஸ். 500 தவிர மற்ற பிரிவு பங்களின் விலை குறைந்ததால், அவைகளின் குறியீட்டு எண்களும் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் என்.டி.பி.சி, ரிலையன்ஸ் எனர்ஜி, பி.ஹெச்.இ.எல், ஹெச்.டி.எப்.சி வங்கி, எல். அண்ட் டி, சத்யம், டி.சி.எஸ், சிப்லா, டாக்டர் ரெட்டி, இன்போசியஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஹெச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ,சி.ஐ. வங்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஒ.என.ஜி.சி, ஹிந்துஸ்தான் யூனிலிவர், விப்ரோ ஆகிய பங்குகளின் விலைகள் குறைந்தன.

ஐ.டி.சி, மாருதி, ரான்பாக்ஸி, எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், அம்புஜா சிமென்ட், கிராசிம், ஹின்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் அதிகரித்தன.

இன்று இதே நிலை தொடரும் என்ற கருத்து பங்குச் சந்தை வட்டாரங்களில் நிலவுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments