Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் 893 புள்ளிகள் உயர்வு!

Webdunia
புதன், 14 நவம்பர் 2007 (20:29 IST)
இன்று ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையில் (சென்செக்ஸ்) 893 புள்ளிகள் அதிகரித்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் 243 புள்ளிகள் அதிகரித்து சாதனை படைத்தது.

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே தொய்வில்லாமல் பங்குகளின் விலை அதிகரித்தது. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ஆர்வமாக பங்குகளை வாங்கின. சென்செக்ஸ் பிரிவில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் மட்டுமல்லாமல், மிட் கேப், சுமால் கேப், பி.எஸ்.இ-500 பிரிவு நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்தது. கடந்த ஒரு வாரமாக பங்குச் சந்தையில் நிலவிய மந்தப் போக்கு மாறி, மீண்டும் சுறுசுறுப்பாக பங்கு பரிமாற்றம் நடந்தது.

சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சு வார்த்தை நடத்த இடதுசாரிகள் தெரிவித்து வந்த எதிர்ப்பை கைவிட்டது. வருகினற 16 ஆம் தேதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி - இடதுடசாரி கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய உயர்மட்டக் குழுக் கூட்டம் நடக்க உள்ளது. அத்துடன் நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடரில் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை நிலவவில்லை. இது போன்ற அரசியல் காரணங்களினால் பங்குச் சந்தையில் சாதகமான நிலைமை நிலவுகிறது என்று புரோக்கர்கள் தெரிவித்தனர்.

இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 893.58 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 19,929.06 ஆக முடிந்தது. இதே போல் மிட்கேப் 171.91 புள்ளிகளும், சுமால் கேப் 238.09 புள்ளிகளும், பி.எஸ்.இ-500 294.18 புள்ளிகளும் அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 242.50 புள்ளிகள் அதிகரித்து 5937.90 புள்ளிகளில் முடந்தது. இதே போல் மற்ற பிரிவு பங்கு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள டாடா மோட்டார், டாடா ஸ்டீல், டி.சி.எஸ், ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட், பஜாஜ் ஆட்டோ, பி.ஹெச்.இ.எல், கிராசிம், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, இன்போசியஸ், எல். அண்ட் டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, விப்ரோ, பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஹூன்டால்கோ, மாருதி, என்.டி.பி.சி, ஒ.என்.ஜி.சி, ஸ்டேட் வங்கி, சிப்லா, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரான்பாக்ஸி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, சத்யம், ஐ.டி.சி ஆகிய முப்பது நிறுவனங்களின் பங்குகளின் விலைகளும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments