Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் பாய்ச்சல்! 500 புள்ளிகள் உயர்வு!

Webdunia
புதன், 14 நவம்பர் 2007 (12:09 IST)
மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் காலையில் வர்த்தகம் தொட்கியவுடனேயே விறுவிறுப்பாக இருந்தது. சென்ற வாரம் நிலவிய மந்த நிலை நேற்று சிறிது மாறியது. இன்று எதிர்பார்த்தபடி பங்கு விலைகள் அதிகரிக்க தொடங்கியது.

காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீடும் (நிஃப்டி) 146 புள்ளிகள் உயர்ந்தது.

காலை 11.45 நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் (சென்செக்ஸ்) 583.36 புள்ளிகள் அதிகரித்து 19,618.94 புள்ளிகளாக இருந்தது. மிட் கேப் 184.63 புள்ளிகளும், சுமால் கேப் 257.93 புள்ளிகளும், பி.எஸ்.இ-500 224.29 புள்ளிகளும் அதிகரித்துள்ளன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 176.50 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 5871.90 புள்ளிகளாக இருந்தது. எல்லா பிரிவு பங்குகளின் விலை அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி, பஜாஜ் ஆட்டோ, சிப்லா, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, மாருதி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, கிராசிம், ஹின்டால்கோ, ஹூந்துஸ்தான் யூனிலிவர், ஒ.என்.ஜி.சி, சத்யம், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, எஸ்.பி.ஐ, பி.ஹெச்.இ.எல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஒ.என்.ஜி.சி, என்.டி.பி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்தது.
அம்புஜா சிமென்ட், விப்ரோ, மகேந்திரா அண்ட் மகேந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments