Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை 298 புள்ளிகள் உயர்வு!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (21:22 IST)
இன்று மும்பை பங்குச் சந்தையில் கடந்த ஆறு வர்த்தக நாட்களில் இருந்த நிலைமை மாறியது. கடந்த வாரம் முழுவதும் பங்குச் சந்தை இறங்குமுகமாக இருந்தது. சிறிது நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இன்று சென்செக்ஸ் குறியீட்டு எண் 298.21 புள்ளிகள் அதிகரித்தது.

காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய உடன் பங்குகளின் விலை குறைந்து சென்செக்ஸ் 56 புள்ளிகள் சரிந்தது. ஆனால் அடுத்த கால் மணி நேரத்தில் நிலைமை மாறியது. ஒரு நிலையில் 574 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 19,210.48 புள்ளிகளை தொட்டது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் காலையில் இறங்கி, பிறகு படிப்படியாக அதிகரித்தது. இறுதியில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட 78.30 புள்ளிகள் அதிகரித்து 5,695.40 புள்ளிகளில் முடிந்தது.

இன்று எல்லா பிரிவு தொழில் துறையின் பங்குகளின் விலையும் அதிகரித்தன. குறிப்பாக வங்கி, இயந்திர தளவாடங்கள், மின் உற்பத்தி பிரிவுகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 168.58 புள்ளிகளும், சுமால் கேப் பிரிவு 181.65 புள்ளிகளும், பி.எஸ்.இ-500 பிரிவு 128.82 புள்ளிகளும் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஐ.டி.சி, ஏ.சி.சி, பி.ஹெச்.இ.எல், ஹிந்துஸ்தான் யூனிலிவர், மாருதி, என்.டி.பி.சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், பஜாஜ் ஆட்டோ, கிராசிம், ஹெச்.டி.எப்.சி வங்கி, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தன.

பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, ஹூன்டால்கோ, இன்போசியஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா, சத்யம்,அம்புஜா சிமென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்தன.










எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments