Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை 293 புள்ளிகள் சரிவு!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (20:31 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் தீபாவளி பண்டிகையை ஒட்டி மகாரத் என்று அழைக்கப்படும் சுபதினத்திலேயே பங்குகளின் விலை குறைந்து குறியீட்டு எண்கள் சரிந்தன.

வட இந்தியாவில் வர்த்தகர்கள ், தொழில் துறையினர் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளை மகாரத் தினம் என்று அழைக்கின்றனர ். இந்த நாளை சுபதினமாக கருதுகின்றனர ். இதனால் அன்று புது கணக்கு தொடங்குகின்றனர ். இந்த தினத்தில் இந்த தினத்தில் செல்வம் சேர்ப்பது அதிரஷ்டகரமானது என்ற நம்பிக்கை தொன்று தொட்டு நிலவி வருகிறத ு.

இதன்படி அன்று மும்பையில் தங்கம ், வெள்ளி சந்த ை, பங்குச் சந்தை ஆகியன இன்று விடுமுறையாக இருந்தாலும் அடையாளமாக மாலையில் சிறிது நேரம் இயங்கின.

இன்று மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் மாலை 6 மணிமுதல் 7 மணிவரை வர்த்தகம் நடைபெற்றது.

இதில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 293.69 புள்ளிகள் குறைந்தது. இன்றைய இறுதி நிலவரம் 18,907.60

பி.எஸ்.இ 500 குறியீட்டு எண் 20.62 புள்ளிகள் குறைந்தது.

அதே நேரத்தில் மிட் கேப் 67.85 புள்ளிகளும், சுமால் கேப் 145.97 புள்ளிகளும் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டான நிஃப்டி 83.25 புள்ளிகள் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில் மிட் கேப் பிரிவு தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.

இன்றைய இறுதி நிலவரம் நிப்டி 5614.90

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி, ஏ.சி.எல், பி.ஹெச்.இ.எல், ஹெச்.டி.எப்.சி வங்கி, இன்போசியஸ், மாருதி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டி.சி.எஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, கிராசிம், டாக்டர் ரெட்டி, ஹின்டால்கோ, ஐ.டி.சி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, சத்யம், எஸ்.பி.ஐ, விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, ஹூந்துஸ்தான் யூனிலிவர், என்.டி.பி.சி, ரான்பாக்ஸி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல் ஹெச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

ஒ.என்.ஜி.சி, சிப்லா ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்கு விலை மட்டும் அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 8 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆன்லைன் கேம் விளையாட கூடாது என கண்டித்த பெற்றோர்.. 3 பேரை கொலை செய்த வாலிபர்..!

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

Show comments