Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் இன்றும் சரிவு!

Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (19:32 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் (சென்செக்ஸ்), தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி ஆகியன இன்றும் சரிந்தது!

மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் முதல் ஐந்து நிமிடத்தில் பங்குகளின் விலை அதிகரித்தது. பிறகு மதியம் வரை ஏற்ற இறக்கமாக இருந்த நிலை மாறி, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பங்குகளின் விலை சரியத் துவங்கியது.

சென்செக்ஸ் குறியீட்டு பிரிவில் உள்ள பங்குகள் மட்டுமல்லாமல், மற்ற பிரிவில் இருக்கும் பங்குகளின் விலையும் சரிந்தன.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் நிஃப்டி பிரிவில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடத்தில் விலை அதிகரித்தன. காலையில் இருந்தே ஏற்ற இறக்கமாக இருந்த நிஃப்டி மதியத்திற்கு பிறகு குறைந்து.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நேற்றைய இறுதி நிலவரத்தை விட 110.84 புள்ளிகள் குறைந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 19,400.67).

இதே போல் மிட் கேப் 29.34 புள்ளிகளும், சுமால் கேப் 107.90 புள்ளிகளும், பி.எஸ்.இ - 100 38.06 புள்ளிகளும்,பி.எஸ்.இ - 200 8.09 புள்ளிகளும், பி.எஸ்.இ - 500 29.57 புள்ளிகளும் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிப்டி நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 4.15 புள்ளிகள் குறைந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 5,786.50).

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி, ஏ.சி.எல், மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, என்.டி.பி.சி, டாடா ஸ்டீல், பி.ஹெச்.இ.எல், சிப்லா, ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

டாடா மோட்டார், பஜாஜ் ஆட்டோ, கிராசிம், இன்போசியஸ், ஐ.டி.சி, எல் அண்ட் டி, ரான்பாக்ஸி, சத்யம், பார்தி ஏர்டெல், கிரேசம், ஹெச்.டி.எப்.சி, ஐ.டி.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஒ.என்.ஜி.சி, டி.சி.எஸ், டாக்டர் ரெட்டி, ஹூன்டால்கோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஐ..சி.ஐ.சி.ஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments