Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி!

Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (12:58 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.

இன்று காலையில் அந்நியச் செலவாணி வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலர் ரூ.39.18 பைசா என்ற அளவில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 12 பைசா குறைவு (நேற்றைய இறுதி விலை ரூ.39.30 /39.31).

பிறகு நிலைமை சிறிது மாறி டாலரின் மதிப்பு அதிகரித்தது. 1 டாலர் ரூ.39.25/ 39.26 என அதிகரித்தது.
டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடையாமல் இருக்க ரிசர்வ் வங்கி தலையிட்டு, அதிகளவு டாலரை வாங்கியது. இதனால் ஒரு அளவுக்கு மேல் டாலரின் மதிப்பு குறைவும், இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதும் தடுக்கப்பட்டது.
இன்று ஏற்றமதியாளர்கள் அதிகளவு டாலரை விற்பனை செய்ததால் டாலரின் மதிப்பு சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கி, இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு குறையாமல் இருக்க செப்டம்பர் மாதத்தில் அந்நியச் செலவாணி சந்தையில் இருந்து 1,600 கோடி டாலரை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments