Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் 20 புள்ளிகள் உயர்வு!

Webdunia
புதன், 24 அக்டோபர் 2007 (19:47 IST)
மும்பை பங்குச் சந்தையில் காலை முதல் ஏற்ற இறக்கமாக இருந்தது. பல முதலீட்டு நிறுவனங்கள், ஒரு நிறுவனத்தின் பங்கை விற்று விட்டு, வேறு ஒரு துறையில் உள்ள நிறுவனத்தின் பங்குகளை வாங்கின. ஒரு நிலையில் சென்செக்ஸ் 339.65 புள்ளிகள் வரை அதிகரித்தது. அதே போல் 175.67 புள்ளிகள் வரை குறைந்தது. இறுதியில் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 20 புள்ளிகள் உயர்ந்து 18,512.91 புள்ளிகளில் முடிந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டான நிப்டியும் இறுதியில் 22.45 புள்ளிகள் அதிகரித்து இறுதியில் 5,496.15 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையிலும் ஒரு நிலையில் நிப்டி 5,577.90 புள்ளிகள் வரை அதிகரித்தது. அதே போல் 5,419.40 புள்ளிகளாகவும் குறைந்தது.

உலோகம், இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. மற்ற பிரிவுகளான மிட்கேப், சுமால் கேப், பி.எஸ்,இ. 100, 200, 500 ஆகிய பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

பங்குச் சந்தையில், சில கட்டுப்பாடுகளை விதிக்க உத்தேசித்துள்ள, பங்குச் சந்தை கட்டுப்பாடு வாரியத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments