Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை 54 புள்ளிகள் உயர்வு!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (19:33 IST)
மும்பை பங்கச் சந்தையில் இன்று பங்குகளின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்தது. கடந்த வாரம் நிலவிய நிலைமையில் மாற்றம் காணப்பட்டது.

கடந்த வாரம் பார்சிபட்டரி எனப்படும் பங்கேற்பு பத்திரங்கள் மூலம் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு செபி சில கட்டுப்படாடுகளை விதிப்பதாக அறிவித்தது. இதனால் சென்ற் புதன் கிழமை காலையிலேயே பங்குகளின் விலை குறைந்து, சென்செக்ஸ் புள்ளியும் சரிந்தது. இதனால் 1 மணி நேரம் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

அதற்கு பிறகு அடுத்த இரண்டு நாட்களிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பல்வேறு தரப்பில் இருந்தும் பங்குச் சந்தை எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பங்குகளின் விலையில் அதிக மாறுபாடு காணப்பட்டது. மாலையில் வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 54.01 புள்ளிகள் அதிகரித்து 17,613.99 புள்ளிகளில் முடிவடைந்தது. ( வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 17,559.98 ) கடந்த வாரம் நான்கு நாட்களில் சென்செக்ஸ் 1,599.69 புள்ளிகள் குறைந்தன.

ஆனால் தேசிய பங்குச் சந்தையில் 31.30 புள்ளிகள் குறைந்தது. இறுதியில் நிப்டி குறியீட்டு எண் 5,184.00 புள்ளிகளாக முடிவடைந்தது. ( வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 5215.30 )

அந்நிய முதலீட்டு நிறுவனங்களை பார்சிபட்டரி நோட் மூலம் துணை கணக்கின் வாயிலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிப்பதது பற்றி செபி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வந்தன. இது பங்குச் சந்தையில் சிறிது உற்சாகத்தை ஏற்படுத்தியது. சென்ற வாரம் கடைசி இரண்டு நாட்களில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ 1,751 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்து, பங்குச் சந்தையில் இருந்து வெளியேறியுள்ளன.

ஹெச்.டி.எப்.சி வங்கி, ஐ. சி.ஐ.சி.ஐ வங்கி, எஸ்.பி.ஐ வங்கி, அம்புஜா சிமென்ட், ரிலையன்ஸ் எனர்ஜி, ஏ.சி.சி, எல் அண்ட் டி, ஹூன்டால்கோ, ஐ.டி.சி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், பர்திஏர்டெல், டி.சி.எஸ், இன்போசியஸ், சத்யம், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப், சுமால் கேப், பி. எஸ்.இ 100, 200, 500 ஆகிய பிரிவுகளில் உள்ள பங்குகளின் விலை அதிகரித்தன. அதனால் இவற்றின் குறியீட்டு புள்ளிகளும் உயர்ந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments