Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் குறைந்த அளவே பாதிப்பு

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (17:49 IST)
டோக்கிய ோ: ஜப்பானும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஜப்பான் குறிப்பிடத்தக்க நாடு. இதன் வருவாயின் பெரும்பகுதி ஏற்றுமதியை நம்பியே உள்ளன.

ஜப்பானின் அந்நியச் செலவாணி நாணயமான யென் நாணயத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தார் நவம்பர் மாத ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துள்ளது. ஏற்றுமதி 8.9 விழுக்காடு குறைந்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி 6.9 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அத்துடன் கடந்த ஆறு மாதமாக ஜப்பானின் உள்நாட்டு மொத்த உற்பத்தி குறைந்துள்ளது. மார்ச் மாதவாக்கில் 1.3% ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜப்பானைப் போலவே, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று பிரபல எக்கனாமிஸ்ட்டின் கருத்து கணிப்பில் இருந்து தெரியவந்துள்ளது

அதே நேரத்தில் தற்போதைய புள்ளி விபரங்களின் படி பார்த்தால் ஜப்பானை விட, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் அதிக அளவு பாதிப்பு இருக்கும் என்று தெரிகிறது. இந்த நாடுகளின் வங்கிகளை விட, ஜப்பான் நாட்டு வங்கிகள் சிறப்பாக உள்ளன.

ஜப்பானின் ஏற்றுமதி நவம்பர் மாதம் 27 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த ஏற்றுமதி குறைந்துள்ள அளவு அதிகமாக தெரிந்தாலும், உண்மையில் அதிக அளவு பாதிப்பு இல்லை..

ஏனெனில் ஜப்பானின் வர்த்தகம் யென் நாணய மதிப்பிலேயே மேற்கொள்ளப்படுகிறது. நவம்பர் மாதத்தில் யென் நாணயத்தின் மதிப்பு சுமார் 24 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த மதிப்பு உயர்வை கணக்கிட்டால் ஜப்பானின் ஏற்றுமதி 9 விழுக்காடு மட்டுமே குறைந்துள்ளது. இறக்குமதி 7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் உள்நாட்டு சந்தையில், பல்வேறு பொருட்களின் தேவை குறையவில்லை. இதனால் தொழில் துறை பாதிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

பல்வேறு நாடுகளில் தனி முத்திரையை பதித்த ஜப்பானைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 71 வருடங்களில் முதன் முறையாக டயோட்டா நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கும் என்று தெரிகிறது. இதன் ஏற்றுமதி 15 குறைந்துள்ளது. இதே போல் மற்றொரு வாகன துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஹோன்டா மோட்டார் நிறுவனத்தின் இலாபமும் குறையும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் மற்ற நாட்டு அந்நியச் செலவாணிகளுடன் ஒப்பிடுகையில், ஜப்பானின் யென் பலமாகவே உள்ளது. இதிலிருந்து மற்ற நாடுகளை விட ஜப்பான் பொருளாதாரம் வலிமையாக இருப்பது தெரியவருகிறது. அத்துடன் ஜப்பானில் வட்டி விகிதம் மிக குறைவு. மேலை நாடுகளின் கணக்கீடின் அடிப்படையில் கணக்கிட்டால் ஜப்பானின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 2.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இதிலிருந்து குறைந்த வட்டி விகிதம், பற்றாக்குறை ஆகியவைகளை கணக்கிட்டால், மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளை விட, ஜப்பானில் பாதிப்பு குறைவாகவே உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments