Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கியூபா மீதான பொருளாதார தடையை நீக்கு: இந்தியா!

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (11:35 IST)
ஐக்கிய நாடுகள் சப ை: ஐ.நா. பொதுச் சபையில் கியூபாவிற்கு எதிராக அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடையை நீடிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக வாக்களித்தன.

லத்தீன் அமெரிக்கா என்று பரவலாக அழைக்கப்படும் வட அமெரிக்க கண்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள நாடு கியூபா. இந்த நாட்டில் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சி நடந்து, சோஷலிச அரசு ஆட்சியில் உள்ளது.

முதலாளித்துவத்தின் தலைமகனாக இருக்கும் அமெரிக்காவுக்கு, தனது அருகிலேயே கம்யூனிச கொள்கைகளை கடைபிடிக்கும் சோஷலிச நாடு இருப்பது பிடிக்கவில்லை.

எனவே கியூபாவின் முன்னேற்றத்திற்கு எதிராக பல வழிகளிலும் அமெரிக்கா தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த 16 ஆண்டுகளாக கியூபா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. இதன்படி கியூபாவுடன் வர்த்தகம், நிதி பரிமாற்றத் தடைகளை விதித்துள்ளது.

தற்போது ஐ.நா. பொது சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில் 192 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த கூட்டத்தில் அமெரிக்காவின் கூட்டாளிகளும், அதற்கு எதிராக உள்ள நாடுகளும் ஒரே குரலில் கியூபாவிற்கு எதிரான பொருளாதார தடையை நீக்கும்படி அமெரிக்காவை வற்புறுத்தின.

இந்த வற்புறுத்தலுக்கு எல்லாம் புஷ் நிர்வாகம் அசைந்து கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இதே மாதிரியான தீர்மானங்களை இதுவரை 16 தடவைகள் அமெரிக்கா புறக்கணித்துள்ளது.

கியூபாவின் பொருளாதார தடையை நீக்கும் தீர்மானத்தை ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள நாடுகள், இந்தியா போன்ற அணிசேரா நாடுகள் ஆதரித்தன.

இதற்கு அமெரிக்கா, இஸ்ரேல், பலாலு ஆகிய நாடுகள் மட்டும் ஆதரித்தன. வாக்கெடுப்பில் மைக்ரோனேஷியா, மார்ஷல் தீவுகள் ஆகிய இரு நாடுகளும் கலந்து கொள்ளவில்லை.

ஐ.நா.வில் உறுப்பினராக உள்ள 192 நாடுகளில் கியூபா மீதான பொருளாதார தடை நீக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக 185 நாடுகள் வாக்களித்துள்ளன.

சென்ற வருடமும் இதே மாதிரி தீர்மானத்திற்கு ஆதரவாக 184 நாடுகள் ஆதரித்தன. நான்கு நாடுகள் எதிர்த்தன. ஒரு நாடு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த தீர்மானத்தை எதிர்ப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல். அமெரிக்காவில், குறிப்பாக புளோரிடா மாநிலத்தில் கியூபாவில் இருந்து வெளியேறியவர்கள் அதிக அளவு குடியேறியுள்ளனர்.

இவர்களது வாக்குகள் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவர்களுக்கு மிக முக்கியம். இதனால் அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரச கட்சி. ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் இருவருமே, கியூபா பொருளாதார தடையை நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் பாரக் ஒபாமா, இந்த தடையின் சில பகுதிகளை தான் நீக்க போவதாக கூறுகின்றார்.

ஆனால் ஆளும் குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் தடையை அப்படியே நீட்டிக்க போவதாக அறிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கும், ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கும் வேறுபாடு உள்ளது.

ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம், இதன் உறுப்பு நாடுகளை கட்டுப்படுத்தாது.

ஆனால் ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம், எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்தும் என்பது கவனிக்கத்தக்கது.

ஐ.நா. பொதுச் சபையில் கியூபா மீதான பொருளாதார தடையை தீர்மானத்தை நேற்று, கியூபா அயலுறவு அமைச்சர் பிலிப்பி பிரிஜ் ரோக்யு தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், கியூபா மீதான தடை சட்ட விரோதமானது. நியாமற்றது. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கடைப்பிடித்த தோல்வி அடைந்த கொள்கைகளை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டுமா என்பதை, புதிய அமெரிக்க அதிபர் முடிவு செய்யட்டும் என்று கூறினார்.

அமெரிக்க பிரதிநிதி ரொனால்ட் கோராட் பதிலளித்து பேசுகையில், இந்த தடை கியூபா மக்களுக்க உணவு, மற்ற மனிதாபிதமான உதவிகள் வழங்குவதை தடை செய்யவில்லை. ஆனால் அதன் ஆட்சியாளர்கள் பொருளாதார பலன் அடைவதை தடை செய்கிறது என்று கூறினார்.

அதே நேரத்தில் கியூபா மீது 46 வருடங்களாக நீடிக்கும் தடையை இந்தியா கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த தடையை ஆரம்பத்தில் இருந்தே இந்தியா எதிர்த்து வருகிறது.

ஐ.நா. பொதுச் சபை விவாதத்தில் கலந்து கலந்து கொண்டு பேசிய இந்திய பிரதிநிதி ராஜீவ் சுக்லா, இந்த மாதிரி ஒரு தலைப்பட்ச தீர்மானங்கள், அடுத்த நாட்டின் இறையான்மையில் தலையிடுவதாகும் என்று கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், அமெரிக்கா கியூபா மீதான பொருளாதார தடையை நீக்கி கொள்ள வேண்டும். அமெரிக்க உள்நாட்டு சட்டங்கள், அயல்நாடுகளில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் துணை நிறுவனங்களும் கியூபாவுடன் வர்த்தக உறவு கொள்வதற்கு தடை விதிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

அமெரிக்காவின் 1992ஆம் வருடத்திய கியூபா ஜனநாயக சட்டம், 1996ஆம் வருடத்திய ஹெல்ம்ஸ்-புரூடன் சட்டம் ஆகியவை, மற்றொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் சட்டங்களாகும். இந்த மாதிரியான சட்டங்களை எதிர்க்கும் சர்வதேச சமுதாயத்திற்கு, இந்தியா எவ்வித நிபந்தனை இல்லாத ஆதரவு தெரிவிக்கிறது.

ஐ.நா. பொதுச் சபை, அடுத்த நாட்டின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்கள், விதி முறைகள், மற்ற பாதிப்பை ஏற்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதை அமெரிக்கா உதாசீனப்படுத்துவது வருத்தமளிக்க கூடியதாக உள்ளது

கியூபா மீதான தடை நீக்கும் ஐ.நா. பொது சபையின் தீர்மானங்களை நிறைவேற்றாமல் இருப்பது, உலக மக்களின் கருத்தை அவமதிப்பதாகும், இந்த தடையால் கியூபா மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், இதன் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக உயிர் காக்கும் மருத்துவ கருவிகள், மருந்துகள், தொழில் நுட்பம், பரிசோதனை கருவிகள் கியூபா மக்களுக்கு கிடைப்பது சிரமமாக இருக்கின்றது என்று கூறினார்.

மு‌ற்று‌ம்.

மு‌ற்று‌ம்.

அயல்நாடுகளில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் துணை நிறுவனங்களும் கியூபாவுடன் வர்த்தக உறவு கொள்வதற்கு தடை விதிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

அமெரிக்காவின் 1992ஆம் வருடத்திய கியூபா ஜனநாயக சட்டம், 1996ஆம் வருடத்திய ஹெல்ம்ஸ்-புரூடன் சட்டம் ஆகியவை, மற்றொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் சட்டங்களாகும். இந்த மாதிரியான சட்டங்களை எதிர்க்கும் சர்வதேச சமுதாயத்திற்கு, இந்தியா எவ்வித நிபந்தனை இல்லாத ஆதரவு தெரிவிக்கிறது.

ஐ.நா. பொதுச் சபை, அடுத்த நாட்டின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்கள், விதி முறைகள், மற்ற பாதிப்பை ஏற்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதை அமெரிக்கா உதாசீனப்படுத்துவது வருத்தமளிக்க கூடியதாக உள்ளது

கியூபா மீதான தடை நீக்கும் ஐ.நா. பொது சபையின் தீர்மானங்களை நிறைவேற்றாமல் இருப்பது, உலக மக்களின் கருத்தை அவமதிப்பதாகும், இந்த தடையால் கியூபா மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், இதன் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக உயிர் காக்கும் மருத்துவ கருவிகள், மருந்துகள், தொழில் நுட்பம், பரிசோதனை கருவிகள் கியூபா மக்களுக்கு கிடைப்பது சிரமமாக இருக்கின்றது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments