Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி ஆதாரங்கள்!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (20:38 IST)
புதுப்பிக்க இயலாத எரிசக்தி ஆதாரங்களை (பெட்ரோலியம், நிலக்கரி போன்றவை) சென்ற நூற்றாண்டில் அதிக அளவு பயன்படுத்தியதால் சுற்றுச் சூழல ் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் போது, இவற்றில் இருந்து வெளியேறும் வாயுக்கள் சுற்றுப்புறச் சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதனால் ஓசோன் மண்டலத்தில் பாதிப்ப ு, உலகம் வெப்பம் அடைதல ், வானிலை மாற்றம் ஆகியவை ஏற்படுகின்றன.

இத்துடன் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை சுற்றுப்புற சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர பெரிய கட்டடங்கள் மற்றும் வீடுகளில் எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதாலும் பாதிப்பு ஏற்படுகிறது.

பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலைகள் அதிகரித்து வருவதாலும், இதை பயன்படுத்துவதால் சுற்றுப்புற சூழலில் பாதிப்பு ஏற்படுகிறது.

உலகில் தற்போது இவைகளுக்கு மாற்றாக புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி ஆதாரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சக்தி!

மின்சக்தியை உற்பத்தி செய்வதில் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி ஆதாரங்களாக காற்ற ு, தண்ணீர ், உயிரி பொருட்கள் மற்றும் சூரிய சக்தி ஆகியவை மிக முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன.

காற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியை பயன்படுத்துவது மிக அதிகமான அளவில் உள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் மற்ற புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி ஆதாரங்களைவிட மிக அதிகமாகும். காற்றாலைகள் மூலம் வருடத்திற்கு 1,500 முதல் 2,000 மெகாவாட் திறனுள்ள மின்சாரம் கிடைக்கிறது.

காற்றை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்துவதில் ஜெர்மன ி, ஸ்பெயின ், அமெரிக்கா ஆகிய நாடுகளை அடுத்து உலகில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.

புதிதாக காற்றாலை மூலம் இந்த ஆண்டு 1,390 மெகாவாட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதையும் சேர்த்து 7,660 மெகவாட் அளவுள்ள மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

புதுப்பிக்கக் கூடிய எரிசக்தியை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 11,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இதில் காற்றைலைகள் மூலம் பெறப்படும் மின்சக்தி மிக அதிகமாகும்.

2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை காற்றாலை மூலம் 8,757 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாயிற்று.

நீர்மின்சக்தி திட்டங்கள ்

மத்திய அரசு 25 மெகாவாட் திறனுள்ள சிறிய அளவிலான மின்சக்தி திட்டங்களை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்போது இவை தனியார் முதலீடுகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2007 ஆம் ஆண்டு 162 மெகாவாட் அளவுள்ள சிறிய நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, இவற்றின் மூலம் இதுவரை மொத்தம் 2,180 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் சில பகுதிகள ், உத்தரகாண்ட ், உத்தர பிரதேசம ், அருணாச்சலப் பிரேதம் ஆகிய மாநிலங்களில் உள்ள மலைப் பகுதிகளில் சிறிய நீர்மின் திட்டங்கள் மிகுந்த சாதனைகளைப் படைத்துள்ளன.

உயிரி பொருட்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் எரிசக்தி ஆதாரங்கள ், மனிதன் தோன்றிய நாள் முதலாக பயன்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் டன் அளவுள்ள கழிவுகள் விவசாயம் மற்றும் காடுகளில் இருந்து கிடைக்கின்றன.

இவை வீணாக எரிக்கப்பட்டு சுற்றுச் சூழலை மாசுப்படுத்துகின்றன. இதுபோன்ற கழிவுகளின் மூலம் மின்சாரத்தை திறமையுடன் உற்பத்தி செய்ய முடியும். இதுவரை உயிரி பொருட்கள் மூலம் 95 மெகாவாட் அளவுள்ள மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து கிடைக்கும் வாயுக்களை பயன்படுத்தி 100.11 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்கு அரசு, தொழிற்சாலைகளின் உதவியை நாடியுள்ளது. 2007ஆம் ஆண்டு தவிடு மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் 12 திட்டங்கள ், காகித ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகளில் நிறுவப்பட்டன.

இதுபோன்ற திட்டங்கள் சிறிய அளவிலான தொழிற்சாலைகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன. சிறிய தொழிற்சாலைகளிலும் மற்றும் கிராமங்களிலும் மின்வசதி அளிக்க உயிரி பொருட்களில் இருந்து கிடைக்கும் வாயுக்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தொழிற்சாலைகளில் பயன்படும் பர்னஸ் எண்ணெய்க்கு பதிலாக நிலக்கரியை பயன்படுத்தும் திட்டங்களும் துவக்கப்பட்டுள்ளன. சென்ற நிதியாண்டு வரை விவசாய கழிவுகளைப் பயன்படுத்தி 606 மெகாவாட் அளவுள்ள மின்சாரமும், உயிரி பொருட்களைப் பயன்படுத்தி 800 மெகாவாட் அளவுள்ள மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டன.

கழிவுகளில் இருந்து கிடைக்கும் மின்சாரம ்

நகர்ப்புறங்களில் கிடைக்கும் திடக் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

மாடுகளின் சாணம ், காய்கறி சந்தையில் உள்ள கழிவுகள் மற்றும் கோழிப்பண்ணையில் இருந்து கிடைக்கும் கழிவுகள ், கழிவுநீரை சுத்தப்படுத்தும் பிரிவுகளில் இருந்து கிடைக்கும் கழிவுகள் உட்பட பல்வேறு நகர்ப்புற கழிவுகளைப் பயன்படுத்தி மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இதுபோன்ற திட்டத்தில் 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிய 81.95 மெகாவாட் அளவுள்ள மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

தொலைதூர கிராமங்களுக்கும் மின்வசதி

தொலைதூர கிராமப் பகுதிகளுக்கு மின் இணைப்புகள் கிடைக்காததால் அங்கு மின் உற்பத்தி செய்ய சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் வாயிலாக இக்கிராமங்களில் மின்சாரம் பயன்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் சாணம் மற்றும் பிண்ணாக்கு ஆகிய உயிரி கழிவுகளை பயன்படுத்தும் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2007 ஆம் ஆண்டு இத்திட்டங்களினால் 400 கிராமங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டது. நாட்டில் மொத்தம் 4,198 கிராமங்களுக்கு இதுபோன்று மின்வசதி கிடைத்துள்ளது.

மீண்டும் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்களைப் பயன்படுத்தி 40 லட்சம் சாண எரிவாயு நிலையங்கள ், 14 லட்சம் சூரியசக்தி நிலையங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு 120 மெகாவாட் அளவுள்ள மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டது.

சூரியசக்தியைப் பயன்படுத்தி 70,474 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன. அதைத் தவிர 2.3 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் சூரியசக்தி நீர்சூடேற்றும் கருவிகள் செயல்படுத்தப்பட்டன.

அரிசி ஆலைகள் மற்றும் சிறிய தொழிற்சாலைகள் ஆகியவற்றில் உயிரி பொருட்களின் மூலம் கிடைக்கும் வாயுக்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன.

புதிய திட்டங்கள்

புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்களை பயன்படுத்துவதற்காக அரசு மேலும் புதிய மூன்று திட்டங்களைத் துவக்கியுள்ளது.

சூரிய ஒளி மின்சக்தியை தொழில்நுட்பத்துடன் பயன்படுத்தும் திட்டம். சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சக்தியை மேம்படுத்தி அதை நகரங்களில் பயன்படுத்துவதற்கான திட்டம் மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து கிடைக்கும் கழிவுகளில் இருந்து மின்சக்தியை உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் இதில் அடங்கும்.

11 வது ஐந்தாண்டு திட்டத்தில் 50 மெகாவாட் அளவுள்ள மின்சக்தியை சூரிய ஒளியின் மூலம் உற்பத்தி செய்வது முக்கியமானதாகும். ஒவ்வொரு மெகாவாட் அளவு மின் உற்பத்தி செய்யும் போது 25 முதல் 40 பேருக்கு நேரடியாகவும், 400 பேருக்கு மறைமுகமாக வேலை கிடைக்கின்றது.

இதில் தனியார் துறை ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம் 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 60 நகரங்கள் மின்வசதியைப் பெறும். இத்திட்டத்தில் ரூ.50 லட்சம் வரை அரசு நிதியுதவி அளிக்கும். இனி வரும் ஆண்டுகளில் அரசும், தனியார் துறையும் இணைந்து நகர்ப்புற கழிவுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஐந்து திட்டங்களை மேற்கொள்ளவுள்ளன.

கட்டடங்கள் கட்டப்படும் போது வெளியேறும் கழிவுகளால் இயற்கை ஆதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவின் தற்போதைய விவசாயம் மற்றும் தட்பவெட்ப நிலையை கருத்தில் கொண்டு குளிர்சாதன வசதி இல்லாத கட்டிடங்களை உருவாக்கவும் “ கிரஹ ா” என்றழைக்கப்படும் தேசிய மதிப்பீட்டு முறையையும் தற்போது அரசு உருவாக்கியுள்ளது. வெவ்வேறு வகையான தட்பவெட்ப பகுதிகளைக் கொண்ட நம் நாட்டில் அனைத்து கட்டிடங்களுக்கும் இதுபோன்ற மதிப்பீட்டு முறை சிறந்ததாக இருக்கும்.

2007 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி எரிசக்தி ஆதார அமைப்பு ஒன்றுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதியுதவி அளிப்பதோடு மட்டுமல்லாமல் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்களை மேலும் மேம்படுத்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்பத்தை அரசு அளித்து வருகிறது.

இதற்காக கருவிகளையும் அரசு வழங்குகிறது. சூரிய ஒளியை பயன்படுத்தி எரிசக்தியை தயாரிக்கும் மையம் மற்றும் காற்று சக்தியை பயன்படுத்தி மின்சக்தியை தயாரிக்கும் மையம் ஆகியவற்றுக்கு அரசு தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது. புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்வசதி வசதி திட்டங்களை செயல்படுத்த வடகிழக்கு மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்களை பயன்படுத்துவதற்கான அமைச்சகத்தின் 25-வது ஆண்டு விழா 2007 ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதை சிறப்பிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் தபால் தலைகளை வெளியிட்டார். 25 ஆண்டுகளில் இந்தியாவின் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்கள் என்பது குறித்தும் புத்தகம் வெளியிடப்பட்டது.

ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி ஊர்திகளை செலுத்தும் திட்டம் குறித்த விருது இந்திய தானியங்கி ஊர்திகளின் உற்பத்தியாளர் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.

இதுபற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் புதிய மற்றும் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்களுக்கான அமைச்சகம் தானியங்கி ஊர்திகளின் உற்பத்தியாளர் சங்கம ், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்டது.

ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி எரிசக்தி உற்பத்தி செய்யும் இந்த முதல் திட்டத்தில் அரசும், தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments