Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை: பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:00 IST)
பங்குச் சந்தைகளில் கடந்த இரண்டு மாதமாக பங்குகளின் விலைகள் குறைந்து வருகிறது. இந்த நிலை இந்திய பங்குச் சந்தைக்கு மட்டும் அல்ல. மற்ற நாட்டு பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஜனவரி 10ஆம் தேதி இருந்த அளவுடன் ஒப்பிட்டால் 25 விழுக்காடு குறைந்து உள்ளது. இதற்கு காரணம் பல நாடுகளின் பொருளாதார நெருக்கடியுடன், உள் நாட்டில் தொழில் வளர்ச்சி பாதிப்பு, பணவீக்கம அதிகரிப்பு போன்ற அதிகாரபூர்வ புள்ளி விபரங்களால் பங்குச் சந்தையில் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலை எப்போது மாறும் என்று சரியாக கணிக்க முடியாது. அதே போல் பங்குச் சந்தையில் இருந்து வெளியேறியவர்கள், மீண்டும் பங்குகளை எப்போது வாங்க துவங்குவார்கள் என்பதையும் துல்லியமாக கணிக்க இயலாது.

அதே நேரத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் யூனிட்டுகளை வாங்கியவர்கள் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அவர்கள் வசம் உள்ள யூனிட்டுகளின் மதிப்பு குறைந்தாலும், இந்த குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டாம் என்று பரஸ்பர நிதி நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன.

இதற்கு இவர்கள் கூறும் காரணம ், பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது இருக்கும், முதலீடுகளை அன்றைய சந்தை மதிப்பில் மட்டும் வைத்து கணக்கிட கூடாது, நீண்ட கால முதலீடு என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை. நீங்கள் பரஸ்பர யூனிட்டுகளில் முதலீடு செய்திருந்தால், கடந்த காலத்தில் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் சரிந்த காலத்தில் யூனிட்டுகளின் மதிப்பு குறைந்ததை கணக்கிடுங்கள்.

பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் குறைந்த அளவிற்கு, யூனிட்டுகளின் மதிப்பு குறைந்திருக்காது. அத்துடன் மீண்டும் குறுகிய காலத்திலேயே யூனிட்டுகளின் மதிப்பு அதிகரித்து இருக்கும்.

பங்குச் சந்தையும், அதை தொடர்ந்து யூனிட்டுகளின் மதிப்பு குறைந்த தினங்களில், நீங்கள் யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தால், நிச்சயமாக நஷ்டம் அடைந்து இருப்பீர்கள்.
எனவே பங்குச் சந்தை சரியும் நேரங்களில் யூனிட்டுகளை விற்பனை செய்யாமல் இருப்பது சிறந்தது.

அத்துடன் இதுபோல பங்குகள் விலை குறைந்து, யூனிட்டுகளின் மதிப்பு குறையும் போது, புதிதாக யூனிட்டுகளை வாங்குவதும் நல்ல முடிவாக இருக்கும்.

பரஸ்பர நிதி நிதி, கடன் சந்தை போன்றவைகளில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்கள், குறுகிய காலத்திற்கு முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். குறைந்த பட்சம் 3 முதல் ஐந்து ஆண்டு வரை முதலீடு செய்வதே நல்லது. அத்துடன் மாதா மாதம் குறிப்பிட்ட தொகை செலுத்தும் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட் பிளான் திட்டப்படி முதலீடு செய்பவர்கள் நீண்டகால முதலீடு செய்வதே சிறந்தது. அப்போது தான் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தால் அதிக அளவு பாதிப்பு இல்லாமல், முதலீடு செய்த தொகை அதிகரிக்கும். யூனிட்டுகளின் மதிப்பும் உயரும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஆபத்து என கருதுபவர்கள் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி யூனிட்டுகளில் முதலீடு செய்யலாம். அல்லது ஒரு வருடம் முதல் 2 வருடத்திற்கு பிறகு முதிர்வு பெறும் யூனிட்டுகளில் முதலீடு செய்யலாம்.

பங்குச் சந்தை சரிந்துள்ள இந்த நேரம் தான், நீங்கள் ஏற்கனவே செய்துள்ள முதலீடு இலாபகரமானதா, இதை மாற்றலாமா என்பதை பரிசீலிக்க சரியான நேரம். ஏனெனில் நீங்கள் எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்பதை பொறுத்தே, உங்களின் வருவாய் இருக்கும். நீங்கள் சந்தை ஆபத்துகளை கணித்தல், அதனை எதிர்கொள்ள தயாராக இருத்தல் போன்றவைகளை பொறுத்தே, உங்கள் முதலீட்டின் மீதான இலாபம் இருக்கும்.
பங்குச் சந்தை ஒரே நிலையாக இல்லாமல், அடிக்கடி மாற்றம் இருக்கும் போது, முதலீடு செய்பவர்கள், இதன் ஆபத்தை உணர்நது, அதிக நஷ்டம் வராத பரஸ்பர நிதி யூனிட்டுகளை தேர்ந்தெடுப்பதன் மூலம், வருவாயை கிடைப்பதுடன், நஷ்டம் அடைவதையும் தவிர்க்கலாம்.

நீங்கள் பரஸ்பர நிதியில் நீண்ட காலம் முதலீடு செய்பவராக இருந்தால், குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, (3, 6 மாதம், 1 வருடம ்) உங்கள் .யூனிட்டுகளின் மதிப்பை கணக்கிட வேண்டும். தற்போது உங்களிடம் உள்ள யூனிட்டுகளை விட, இலாபம் தரும் யூனிட்டுகள் எது என்பதை கண்காணிக்க வேண்டும். அதில் முதலீடு செய்வது இலாபம் தரக்கூடியதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இந்த யூனிட்டுகிள் திரட்டப்படும் முதலீடு எந்த தொழில் நிறுவனங்களில் செய்யப்படுகிறது. எத்தனை விழுக்காடு என்பதை கணக்கிட்டு, பழைய யூனிட்டுகளை விற்பனை செய்து, புதிய யூனிட்டுகளை வாங்கலாமா என்று முடிவு எடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் தற்போதுள்ள யூனிட்டுகளில் இருந்து வெளியேறுவதால், பரஸ்பர நிதி நிறுவனம் பிடித்தம் செய்து கொள்ளும் தொகை, குறுகியகால முதலீட்டிற்கு வருமான வரி செலுத்துதல் ஆகியவைகளையும் கணக்கிட வேண்டும்.

இதற்கு பிறகு முடிவு செய்வதே சிறந்ததாக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments