Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஜோரம் மாநிலத்தில் சுண்டெலி வால் இரண்டு ரூபாய்!

Webdunia
webdunia photoFILE
வடகிழக்கு மாநிலமான மிஜோரமில் உள்ள காடுகளில் பல வகையான மூங்கில்கள் வளர்கின்ற ன. இங்கு வெட்டி எடுக்கப்படும் மூங்கில் நாட்டின் பல பாகங்களுக்கும் அனுப்பப்படுகிறத ு. அத்துடன் காகித தொழிற்சால ை, பிளைவுட் பலகை தயாரிக்கும் தொழிற்சாலை போன்ற தொழில் துறைகளில் கச்சாப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்ற ன.

மூங்கிலின் பூ பூக்கும் காலத்தில் எங்கிருந்து தான் சுண்டெலிகள் படையெடுக்குமோ தெரியாத ு. இந்த பூவின் வாசத்திற்கு கவரப்பட்ட சுண்டெலிகள் மூங்கில் காடுகளில் படையெடுத்து விடுகின்றன ். இவைகளுக்கு மூங்கிலின் இளம் குருத்து தான் உணவ ு. ருசியான மூங்கில் இளம் குருத்துக்களை உண்ட சுண்டெலிகள் குடும்ப கட்டுப்பாடு போன்ற எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பல்கிப் பெருகுகின்ற ன. இதன் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போய்விடுகின்றத ு.

மூங்கிலில் 48 வருடத்திற்கு ஒரு முறைதான் பூ பூக்கும ். இவை பெரும்பாலும் பிப்ரவரியில் இருந்து மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் பூ பூக்கும ்.

மூங்கிலில் பூ பூக்கும் காலத்தை மூட்டம் என்று வடகிழக்கு பகுதி விவசாயிகள் அழைக்கின்றனர ். இந்த மூட்டம் பருவம் ஆரம்பித்தால் விவசாயிகளும ், அரசு அதிகாரிகளும் மிரண்டு போய் விடுகின்றனர ். இவர்கள் கனவுகளிலும் சுண்டெலிகள் பிராண்டி எடுக்கின்ற ன. அந்த அளவு சுண்டெலிகள் பயமுறுத்துகின்ற ன. சுண்டெலிகளின் அட்டகாசத்தால் மிஜோரமின் பொருளாதாரமே பாதிக்கப்படுகின்றத ு.

webdunia photoFILE
மூங்கில் காடுகளில் 48 வருடத்திற்கு ஒரு முறை தான் பூ பூக்கும ். இதற்கு முந்தைய காலக்களில் மூட்டம் பருவத்தில் சுண்டெலிகளின் படையெடுபபால் உணவு தானியங்கள் அழிந்து பஞ்சம் தலைவிரித்தாடிய சோக கதையை விவசாயிகள் நினைவு படுத்துகின்றனர ்.

சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருவித மூங்கிலில் பூ பூத்தத ு. அப்போது அரசின் விவசாயத்துறை அதிகாரிகளும ், விவசாயிகளும் முழு அளவில் களத்தில் குதித்து பாதிப்பை தடுத்தனர ்.

சுண்டெலி ஒழிப்பு சிறப்புப் படை!

இந்த ஆண்டு புலுரா என்ற ரக மூங்கிலில் பூ பூக்க ஆரம்பித்துள்ளத ு. இதன் வாசனையால் கவரப்பட்ட சுண்டெலிகளின் படையெடுப்பும் துவங்கிவிட்டத ு.

இதை தடுக்க விவசாயதுறை அதிகாரிகள ், முழு அளவு பூ பூக்க துவங்கும் முன்பு பலூரா வகை மூங்கிலை வெட்டிவிடும் படி விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர ்.

அத்துடன் விவசாய துறையில் பயிர் பாதுகாப்பு என்ற பெயரில் சுண்டெலி ஒழிப்பு சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளத ு. இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் 15 நாட்கள் இரவுகளில் காடுகளில் பதுங்கியிருந்து மூட்டம் காரணமாக சுண்டெலிகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர ்.

அத்துடன் சுண்டெலிகள் விளைந்த பயிர்களை எப்படி தாக்குகின்றன என்பதை ரகசியமாக வீடியோ படம் பிடித்தனர ்.

இதன் தாக்குதல்களை பற்றி மிஜோரம் மாநில விவசாய துறை வெளியிட்டுள்ள அறிக்கையில ், அஜ்வால் மாவட்டத்தில் 22 கிராமங்களில் சுண்டெலிகள் மற்றும் பூச்சிகளின் முதல் கட்ட தாக்குதலில் 945.90 ஹெக்டேர் நிலத்தில் பயிர்கள் அழிந்து விட்ட ன. இதனால் 1,917 குடும்பங்கள் நஷ்டமடைந்துள்ள ன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சுண்டெலி மற்றும் பூச்சிகள் நெற்பயிர்களை தாக்கியதால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் எதிர்காலமே இருண்டு போயுள்ளது என்று கூறியுள்ளத ு.

webdunia photoFILE
அரசின் புள்ளி விவரப்பட ி, அஜ்வால் மாவட்டத்தில் 66 மாவட்டங்களில் நெற் பயிர்களில் 70 முதல் 80 விழுக்காடு வரை சுண்டெலிகள் அழித்து விட்ட ன. இதன் காரணமாக விவசாயிகள் அடுத்த பருவத்திற்கு விதைப்பு நெல் கூட இல்லாமல் பரிதவிக்கின்றனர ். இவர்கள் அடுத்த பருவத்தில் விதைப்பதற்கு விதை தாணியங்களை அரசு வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுக்கின்றனர ்.

இதுவரை சுண்டெலிகளின் தாக்குதலுக்கு 2,210 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிர்கள் அழிந்து போயுள்ள ன. இதனால் 3,403 விவசாய குடும்பங்கள் நஷ்மடைந்துள்ளனர ்.

வடக்கு லுங்பூர ், கிபாங ், சுவாலிங் ஆகிய கிராமங்களில் நெல் பயிர்களை சுண்டெலி மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேலி அமைத்தும ், வலைகளை கட்டிநுள்ளதாகவும் விவசாய துறை அதிகாரிகள் தெரிவித்தனர ்.

வயல்வெளிகளை சுற்றி ஆங்காங்கே சுண்டெலிகளை பிடிக்க பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ன. இவற்றில் தினமும் பத்து எலிகளாவது உள்ளே புகுந்து சிறைபடுகின்ற ன.

மாநில விவசாய துறையில் உள்ள சுண்டெலி கட்டுப்பாட்டு குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுண்டெலிகளை கொன்று அதற்கு சாட்சியாக சுண்டெலியின் வாலை கொண்டு வருபவர்களுக்கு 1 வாலுக்கு ர ூ.2 வழங்குவதாக தண்டோரா மூலம் அறிவித்தத ு.

இதற்கு நல்ல பலன் இருந்ததாக உதவி பயிர் பாதுகாப்பு அதிகாரி ஜேம்ஸ் லால்சியாமிலியான தெரிவித்தார ். அவர் மேலும் கூறுகையில ், சுண்டெலிகளை கொன்று அதன் வாலை கொண்டு வருபவர்களுக்கு 2 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்த பின்பு விவசாயிகள் மத்தியில் சுண்டெலிகளை கொல்வதற்கு அதிக ஆர்வம் இருந்தத ு. தினசரி சுண்டெலியின் வால்கள் மலை போல் குவிந்தன என்று கூறினார ்.

விவசாய துறை அதிகாரிகள் கூறுகையில ், சுண்டெலிகளின் வால்களை செய்தியாளர்கள் முன்னிலையில் எரிப்பது அவசியம ். ஏனெனில் இது ஒரே வாலிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை வாங்குவதை தவிர்க்க அவசியம ்.

அஜ்வால் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு கிராமங்களில் 11,106 எலிகளின் வால் வாங்கப்பட்டுள்ள ன. இதை காலையில் எரித்தோம ். அதற்கு பிறகு வாங்கிய சுண்டெலி வால்களை அடுத்து எரிக்க போகின்றோம ். இன்று காலையில் எரித்த சுண்டெலி வால்களில் பெரும்பான்மையானவை மிஜோரோமின் வடகிழக்கு பகுதியில் உள்ள ராடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கொண்டு வந்தது என்று அஜ்வால் மாவட்ட விவசாயத்துறை அதிகாரி லால்ஜரிலியான தெரிவித்தார ்.

webdunia photoFILE
சுண்டெலி வாலுக்கு பரிசு என்ற திட்டம் மற்ற மாவட்டங்களிலும் சிறப்பாக வேலை செய்கிறத ு. லூங்கிலி மாவட்டத்தில் 30,600 சுண்டெலிகள் கொல்லப்பட்ட ு, அதன் வால் எரிக்கப்பட்டுள்ள ன. இதில் கொலாசிப் கிராமத்தில் ஒரு வாலுக்கு 2 ரூபாய் பரிசு என்ற திட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து வாங்கிய 10, 000 சுண்டெலி வால்களும் அடங்கும ்.

செரிசிப் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 10,500 எலி வால்களையும ், மமீட் மாவட்ட விவசாயிகள் 16,000 ஆயிரம் எலி வால்களையும் கொண்டு வந்து கொடுத்துள்ளனர ்.

இது மட்டுமில்லாமல் விஷம் கொடுத்து ஆயிரக்கணக்கான சுண்டெலிகள் கொல்லப்பட்டுள்ள ன. இதன் வால்களை வெட்டி எடுக்காத காரணத்தினால் இவைகளின் எண்ணிக்கை தெரியவில்லை என்று விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர ்.

சுண்டெலி ஒழிப்புக்காக சிறப்பு படை அமைத்து எவ்வளவுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும ், அவை எஸ்கேப் ஆகி விடுகின்ற ன. சுண்டெலிகள் அதிகளவு பாதிப்பு உண்டாக்கி இருப்பதை விவசாயத் துறை அதிகாரிகள் ஒத்துக் கொண்டனர ்.

மிஜோரம் மாநிலத்தி்ன் விவசாய துறை சுண்டெலி மற்றும் பூச்சிகளின் தாக்குதலினால் 70 முதல் 80 விழுக்காடு நெல் உற்பத்தி குறைந்துள்ளத ு. இதில் 80 விழுக்காடு சுண்டெலிகளாலும ், 20 விழுக்காடு பூச்சிகளாலும் குறைந்துள்ளது என்று மதிப்பிட்டுள்ளத ு.

இந்த சுண்டெலிகள் நெல் பயிர்களை மட்டுமல்லாது கத்திர ி, மிளகாய ், சோயா மொச்ச ை, திராட்ச ை, மற்ற இனிப்பான பழங்கள ், கரும்ப ு, வெண்டைக்காய ், பூசனி ஆகியவற்றையும் ஆசை ஆசையாய் விரும்பு சாப்பிட்டுள்ள ன. இதனால் இந்த பயிர்களும் சேதமடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments