Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாம்பழ மகசூல் மகிழ்ச்சி கொடுக்க .....

Webdunia
இது மாம்பழ ஸீஸன். விவசாயிகள் அறுவடையின் போது கீழ்க் கண்ட முறை க iளக் கையாண்டால ், நல்ல பம்பர் மகசூல் மட்டுமல்லாமல ், விளைச்சலுக்கு நல்ல விலையும் கிடைக்கும். மக்களுக்கும் நல்ல தரமான பழங்கள் கிடைக்கும்.

எந்த நிலையில் பழத்தைப் பறிக்க வேண்டும் !



பச ் iசயிலிருந்து லேசாக மஞ்சளுக்கு மாறும் போது
பறிப்பது உசிதம ்; அல்லது தானாகவே ஒன்றிரண்டு பழங்கள் மரத்திலிருந்து விழுந்தால் பறிப்பதற்கு சரியான சமயமாக எடுத்துக் கொள்ளலாம்.


அறுவடையை விடியற்காலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.


கூடிய வரை ஒவ்வொரு பழத்தையும் கையாலேயே பறிப்பது நல்லது. பறிப்பதற்கு வேறு உபகரணங்கள் உபயோகித்தால் பழங்கள் கீழே விழுந்து அடிபட நேரிடும்.


பறித்த பழங்களை நிழலில் வைக்க வேண்டும்.


அதன் அளவுக்கேற்பவும ், கனியும் நிலைக்கேற்பவும் பிரித்து வைத்தால ், சந்தையில் நல்ல விற்பனையை எதிர்பார்க்கலாம்.


அடிபட் ட, அழுகிய பழங்களை எடுத்து போட்டு விடவேண்டும்.


ப hக்கிங் செய்வதற்கு முன் அறுவடை செய்த பழங்களை 500 டி.டி.எம். எத்ரேல் (நுவாசநட) கரைசலில் போட்டு எடுத்ததால் எல்லாப் பழங்களும் ஒரே சமயத்தில் விரைவாக கனியும் ; அதே சமயம் நல்ல நிறமும் கிடைக்கும்.


மாம்பழங்களை சாக்குப் பையில் பாக்கிங் செய்து அனுப்பக் கூடாது.


காற்று இடைவெளியுடன் உள்ள மரப் பெட்டிகளில் பாக்கிங் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பழத்தையும் தனித் தனியாக நியூஸ் பேப்பரில் சுற்றி பெட்டியில் அடுக்கினால் அவைகளுக்கு சேதம் ஏதும் ஏற்படாது.


விற்பனைக்கு அனுப்பும் முன் 10 முதல் 12 டிகிரி குளிர் நிலையில் வைக்கப்படுமானால் சந்தையில் கூடுதல் காலம் விற்பனைக்கேற்றபடி பழங்கள் இருக்கும்.


பறித்த பழங்களை நன்கு கனிய வைக்க ஒரு அறையில் வைக்கோலை பரப்பி அதன் மேல் அடுக்கி வைக்க வேண்டும். அறையின் ஒரு மூலையில் ஈரத்தன்மை கொண்ட கால்ஷியம் கார்பைட் ரசாயனத்தை சிறிதளவு வைக்க வேண்டும்.. ரசாயன மாற்றத்தால் உருவாகும் அசிட்டலின் வாயு மூலமாக பழங்கள் (காய்கள்) சீக்கிரம் பழுப்பது மட்டுமல்லாமல். நல்ல மணமும ், நிறமும் கிடைக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாஜக ஆட்சி..! காங்கிரஸ் கட்சிக்கு முட்டை..!

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!

முதல்வர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

Show comments