Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலத்த மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

Webdunia
புதன், 17 நவம்பர் 2010 (16:03 IST)
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழகத்த ி‌ன் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு மழைராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,

நவம்பர் 8ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் நவம்பர் 10 முதல் 21 வரை கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பட மாவட்டங்களில் கன மழையும், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன்.

நவம்பர் 10, 11ஆம் தேதிகளில் மழை பெய்தது. தற்போது மீண்டும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், 16ஆம் தேதி வானிலை கணிப்பின்படி வரும் 19, 20 ஆகிய தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து நாகை, கடலூர், புதுச்சேரி, சென்னை, திண்டுக்கல், தேனி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் 21ஆம் தேதியும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நிலநடுக்க தேதி கணிப்பின்படி நவம்பர் 22ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. 24 அல்லது 25ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவ மழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று மழைராஜ் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

Show comments