Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

Webdunia
புதன், 3 மார்ச் 2010 (19:40 IST)
மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் வரும் 5ஆம் தேதி முதல் வட மாநிலங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :

கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் மார்ச் கடைசிக்குள் உலக அளவில் பூகம்பம் ஏற்படும் என தெரிவித்திருந்தேன். மேலும் பிப்ரவரி 18ஆம் தேதி கணிப்பின்படி 21 அல்லது 27ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தேன்.

அதேபோல் பிப்ரவரி 27ஆம் தேதி சிலி நாட்டில் 8.8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அதே பகுதியில் மார்ச் 6 அல்லது 7 ஆம் தேதி 6.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மார்ச் 3ஆம் தேதி கணிப்பின்படி மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் மார்ச் 5 முதல் இந்தியாவின் வட மாநிலங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் மழை தேதியின் கணிப்பின்படி மார்ச் 8 அல்லது 9 ஆம் தேதி மிழக கடலோர மாவட்டங்களில் மழை துவங்கினால் தொடர்ந்து 19ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழைராஜ் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments