Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல் பழ நோயைக் கட்டுப்படுத்த யோசனை

நெல் பழ நோயைக் கட்டுப்படுத்த யோசனை
, செவ்வாய், 30 டிசம்பர் 2008 (10:04 IST)
பட்டுக்கோட்டை: நெல் பழ நோய், நெல் பயிரைத் தாக்கும் பூஞ்சாள நோயாகும். இது பூக்கும், பால் பிடிக்கும் மற்றும் கதிர் முற்றும் தருணங்களில் நெல் பயிரைத் தாக்கி பெருமளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.

இந்த நோய் முதல் கட்டமாக நோய் தாக்கப்பட்ட விதைகள் மூலமாகவோ, மண்ணில் காணப்படும் பூஞ்சாள வித்துக்கள் மூலமாகவோ பரவும். இரண்டாம் கட்டமாக நோய் தாக்கப்பட்ட வயலில் இருந்து காற்றின் மூலம் பரவும்.

பூக்கும் தருணங்களில் மேக மூட்டம், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருத்தல், இரவில் வெப்ப நிலை குறைந்து பனிப் பொழிவுடன் இருத்தல் ஆகியவையும் நோய் பரவுவதற்கான காரணங்கள் ஆகும்.

இந்நோயால் உயர் விளைச்சல் நெல் ரகங்களான கோ 43, சிஆர் 1009, ஏடிடி 38, ஏடிடி 39, பிபிடி- 5204 ஆகிய ரகங்கள் அதிக தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

இந்நோயின் தாக்குதல் முன்பட்ட சம்பாவை விட பின்பட்டத்தில் காலம் தாழ்த்தி நடப்பட்ட பயிரில் தீவிரமாக இருக்கும்.

இந்த நெல் பழ நோயைக் கட்டுப்படுத்த, வயல் வரப்புகளை களைகள் இன்றி சுத்தமாகவும், பயிர்களைத் தொடர் கண்காணிப்பிலும் வைத்திருக்க வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் கடைசி மேலுரம் அல்லது கதிர் உரமாக ஏக்கருக்கு 22 கிலோவுக்கு மேல் யூரியா இடக் கூடாது.

நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்ணாடி இலைப் பருவம், பால் பிடிக்கும் தருணங்களில் இருமுறை காப்பர் ஆக்ஸி குளோரைடு மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் வீதம் அல்லது புரபிகோனசால் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி வீதம் அல்லது ஹெக்சாகோனசால் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு ஒரமில்லி வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற வேளாண் வளர்ச்சி அலுவலர் (பட்டுக்கோட்டை) வெ. வீரப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil