Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் இடுபொருள் உற்பத்தி மையம் அமைக்க மானியம்

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (12:53 IST)
ராசிபுரம ்: சுய உதவி குழுக்களுக்கு உயிரியல் இடுபொருள் உற்பத்தி மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து வேளாண் உதவி இயக்குநர் த.லோகநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவத ு:

ராசிபுரம் எலச்சிபாளையம் வட்டாரத்தில் உயிரியல் இடுபொருள் உற்பத்தி மையம் அமைக் க, சுய உதவிக் குழுவுக்கு ரூ.1.25 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. இதனை அமைக்க ஆர்வமுள்ள சுய உதவிக் குழுவினர் விண்ணப்பிக்கலாம்.

இந்த மையம் அமைக்க ரூ. இரண்டரை லட்சம் செலவாகும். இதனை அமைக்கும் சுய உதவிக் குழுவினருக்கு வங்கி கடனுக்கு பரிந்துரைப்பதுடன ், 50 விழுக்காடு மானியமும் வழங்கப்படும்.

இதில் வேம்பு மருந்துகள ், வேப்பம் புண்ணாக்க ு, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம ், ரைசோபியம ், பாஸ்போ பாக்டீரியா உரங்களையும ், உயிரியல் மருந்துகளான டிரைகோடெர்மா விரிட ி, சூடோமோனாஸ ், என்பிவைரஸ் போன்றவற்றையும் உற்பத்தி செய்து, விற்பனை செய்யலாம்.

இதற்காக தேர்வு செய்யப்படும் சுய உதவி குழுவைச் சேர்ந்த பேருக்கு, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சியளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments