Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழைக்கு பயிர் காப்பீடு

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2008 (12:13 IST)
புதுக்கோட்ட ை: வாழைக்கு பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

தோட்டக்கலைத் துறை மூலம், தேசிய பயிர்க் காப்பீடு திட்டத்தின் மூலம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கீழ்கண்ட ஐந்து வட்டார விவசாயிகள் சேரலாம்.

இதற்காக 155 ஹெக்டேரில் வாழை காப்பீடு செய்ய அரசு ரூ 18.65 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. காப்பீடு தொகைக்கு 10.75 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது.

கடன் பெற்றுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 50% மானியத்தொகையாக ரூ. 11,714 வழங்கப்படும். இந்த காப்பீடு திட்டத்தில் சேர அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

கடன் பெறாத விவசாயிகள் அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.2,17,928 வரை காப்பீடு செய்து கொள்ளலாம். கடன்பெறாத சிறு, குறு விவசாயிகளுக்கு 55% மானியமாக ரூ. 12,885 வழங்கப்படும்.

இதற்காக விவசாயிகள் காப்பீடு கட்டமாக 1 ஹெக்டேருக்கு ரூ.1 0,542 செலுத்த வேண்டும். இதற்கு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில ், அறந்தாங்கி வட்டாரத்தில் பூவாத்தகுடி. கரம்பக்குடி வட்டாரத்தில் கரம்பகுட ி, மழையூர ், கந்தர்வகோட்டை வட்டாரத்தில ், கல்லாகோட்ட ை, புதுநகர ், கந்தர்கோட்ட ை, புதுகை வட்டாரத்தில் வாராப்பூர ், திருவரங்குளம் வட்டாரத்தில் ஆலங்குட ி, கீரமங்கலம ், வெண்ணாவல்குட ி, வளநாடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம் என்று தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments