Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற யோசனை

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (13:07 IST)
ராமநாதபுரம ்: நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெ ற, சான்றுபெற்ற தரமான விதைகளைப் பயன்படுத்துமாறு விதைச்சான்று உதவி இயக்குநர் சி. கனகராசன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாண ி, திருவாடான ை, பரமக்குட ி, நயினார்கோவில ், போகலூர ், கமுதி மற்றும் கடலாடி வட்டாரங்களில் மார்கழி பட்டத்தில் இறவைப் பயிராக நிலக்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் நிலக்கடலை விதைகளைத் தேர்வு செய்த ு, விதைத்து வருகின்றனர்.

நிலக்கடலை பயிரில் மகசூல் குறைவுக்குத் தரக்குறைவான விதைகளைப் பயன்படுத்துவதே காரணம். விவசாயிகள் நிலக்கடலைப் பயிர்களை சில காரணங்களினால் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே அறுவடை செய்து விடுகின்றனர்.

முதிர்ச்சி அடையாத நிலக்கடலை பயிரிலிருந்து பெறப்பட்டதை அடுத்த பருவத்தில் விதைக்காக உபயோகித்து வருகின்றனர்.

இவ்வாறு விதைக்கும் போது முளைப்புத்திறன் குறைந்து பயிர் எண்ணிக்கை குறைந்தும் வீரியமற்ற செடிகளின் மூலம் மகசூல் குறைந்து விடுகிறது.

விதைக்காக பயன்படுத்தப்படும் விதைகள் திரட்சியாகவும ், முதிர்ச்சியடைந்த பருப்புகளை உடையதாகவும் இருக்க வேண்டும்.

சான்று பெற்ற நிலக்கடலை விதைகளைப் பயன்படுத்துவதால் புறத்தூய்மையான நல்ல முளைப்புத் திறன் உடையதான நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பதம் உடையதாகவும் இனத்தூய்மை உடையதாகவும் இருப்பதால் வீரிய செடிகள் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

சான்றுபெற்ற விதைகளைப் பயன்படுத்துவதால் திரட்சியான பருப்புகள் நல்ல எடையுடன் கிடைப்பதால் கூடுதல் மகசூல் பெற முடியும்.

சான்று பெற்ற விதைகளை தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்று பயன்பெறுமாறு சி.கனகராசன் கேட்டுக் கொண்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவுடன் திமுக எம்பி திருச்சி சிவா திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்.. என்ன சொன்னார் தெரியுமா?

இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்கு சீமான் கண்டனம்..!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

Show comments