Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபநாசம் சேர்வலாறு அணைகள் நிரம்பின

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (12:29 IST)
அம்பாசமுத்திரம ்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம ், சேர்வலாறு அணைகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது. இதையடுத்த ு, பாபநாசம் அணையின் உபரி நீர் வழிந்தோடி வழியாக 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம ், சேர்வலாறு அணைகள் மூலம் திருநெல்வேல ி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பெய்த போது. இந்த அணைகள் நிரம்பவில்லை. தற்போது வடகிழக்கு பருவ மழையால், கடனாநத ி, குண்டாற ு, கருப்பாநதி உள்ளிட்ட குறைந்த அளவிலான நீர்மட்டம் கொண்ட அணைகள் நிரம்பின.

பாபநாசம ், சேர்வலாறு அணைகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நிரம்பின. இந்த அணைகள் இதற்கு முன்பு 2006 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நிரம்பின. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணைகள் நிரம்பியதையடுத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. பின்னர ், பாபநாசம் அணையின் உபரி நீர் வழிந்தோடி வழியாக, திறந்து விடப்பட்டது.

முதலில் ஒரு வழிந்தோடி வழியாக விநாடிக்கு 1500 கனஅடி திறக்கப்பட்டது. பின்னர ், நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து நான்கு வழிந்தோடிகள் வழியாக மொத்தம் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால ், பாபநாசம் அகஸ்தியர் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments