Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர்ப் பாசன வசதிக்கு கடன்

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (12:19 IST)
திருச்ச ி: பிற்படுத்தப்பட்டோர ், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த சிற ு, குறு விவசாயிகளுக்கு நீர்ப் பாசன வசதி ஏற்படுத்த மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

நீர் ஆதாரங்களை மேம்படுத்த திறந்தவெளிக் கிணறுகளை ஆழப்படுத்துதல் மற்றும் உள்துள ை, சுற்றுத்துளை அமைத்தல ், செயலற்ற திறந்தவெள ி, ஆழ்குழாய் கிணறுக்குப் பதில் மாற்று திறந்தவெள ி, ஆழ்குழாய் கிணறு அமைத்தல ், ஆயில் எஞ்சின் வாங்குதல ், புதிய மின் மோட்டார் வாங்குதல ், பழுதுபட்ட மோட்டார்களுக்கு புதிய மின் மோட்டார்களை மாற்றி அமைத்தல ், சொட்டு நீர்ப் பாசனம ், தெளிப்பு நீர்ப் பாசனம் அமைத்தல ், நீர்ப் பாசன வசதியை மேம்படுத்த பகிர்வு பாசனக் குழாய் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு கடனுதவி பெற இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர ், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சிற ு, குறு விவசாயிகள் தேவைக்கு ஏற்ப மேல்காணும் நீர்ப் பாசன வசதியை ஏற்படுத் த, விண்ணப்பங்களை வருமானச் சான்ற ு, சாதிச் சான்ற ு, குடும்ப அட்டை நகல் மற்றும் நில உடைமை ஆவண நகல்களுடன ், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம ் என்று மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி.!!

மீண்டும் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்ததா? சென்னையில் இன்றைய நிலவரம்..!

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கல் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையா? தீவிர விசாரணை..!

அமித்ஷாவுடன் திமுக எம்பி திருச்சி சிவா திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்.. என்ன சொன்னார் தெரியுமா?

Show comments