Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உழவர் சந்தை அருகே தனியார் காய்கறிகள் கடை வைக்கக்கூடாது

Webdunia
புதன், 10 டிசம்பர் 2008 (16:30 IST)
சேலம ்: சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தைக்கு அருகே தனியார் காய்கறி வியாபாரிகள் கடை வைக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் ஜெ.சந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உழவர் சந்தை அருகே தனியார் வியாபாரிகள் காய்கறி கடை அமைத்த ு, விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை வழிமறித்து பெற்று அதிக லாபத்துக்கு விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்துள்ளது.

அரசாணைப்படி உழவர் சந்தையின் அருகில் 100 மீட்டர் சுற்றளவில் தனியார் வியாபாரிகள் காய்கறிகள் விற்பனை செய்யக்கூடாது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அனைத்து உழவர் சந்தைகளிலும் 100 மீட்டர் அளவுக்குள் தனியார் வியாபாரிகள் காய்கறிகள் வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதை மீறி விற்பனை செய்வோரின் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நாள்தோறும் உழவர் சந்தைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் ஜெ.சந்திரகுமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments