Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உரிய நஷ்ட ஈடு: மத்திய குழுவிடம் மனு

Webdunia
புதன், 10 டிசம்பர் 2008 (15:56 IST)
கடலூர ்: சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைப் பார்வையிட கடலூர் மாவட்டத்துக்கு நேற்று மத்தியக் குழு வந்தது. இந்த குழுவினரிடம ், கடலூர் மாவட்ட விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை மனு அளித்தது.

இந்த கூட்டமைப்பின் தலைவர் வேங்கடபத ி, பொதுச் செயலாளர் ஏ.பி.ரவீந்திரன ், பொருளாளர் கார்மாங்குடி வெங்கடேசன ், தலைமை நிலையச் செயலாளர் பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பது:

வெள்ளச் சேதம். சிதம்பரம ், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தி இருக்கிறது. இரு வட்டங்களிலும் ஏரிகள்., குளங்கள் மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதற்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.

விருத்தாசலம ், கடலூர ், திட்டக்குட ி, பண்ருட்டி வட்டங்களிலும் மழையால் நெல ், கரும்ப ு, வாழ ை, மக்காச் சோளம ், பருத்த ி, மணில ா, மலர்ச் செடிகள ், காய்கறிகள ், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

எனவே மேற்படி வட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க அரசுக்கு மத்தியக் குழு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments