Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழைகள் சேதம்: இழப்பீடு வழங்க கோரிக்கை

Webdunia
புதன், 10 டிசம்பர் 2008 (15:43 IST)
திருநெல்வேல ி : திருநெல்வேலி மாவட்டத்தில் சூறைக் காற்றால் வாழைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என பா. வேல்துரை எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, அனுப்பியுள்ள மனுவில், சேரன்மகாதேவி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்ச ி, கரம்ப ை, வீரவநல்லூர ், கிரியம்மாள்புரம ், அத்தாளநல்லூர ், அரிகேசவநல்லூர ், திருப்புடைமருதூர ், கூனியூர ், காருகுறிச்ச ி, சேரன்மகாதேவ ி, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளங்குழி ஆகிய கிராமங்களில் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி ஏற்பட்ட சூறாவளியால் சுமார் 20 லட்சம் வாழைகள் சேதமடைந்தன.

இந்த வாழைகள் அனைத்தும் வெட்டக் கூடிய பருவத்தில் இருந்ததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தேன். ஆனால ், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவ ே, விவசாயிகளின் நிலையை கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments