Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 2 வரை மழை பெய்ய வாய்ப்பு

Webdunia
தென்மேற்கு வங்கக் கடலில் மற்றுமொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு உள்ளதால் டிசம்பர் மாதம் 2ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழை ராஜ் கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ், மழை பற்றி ஆய்வு செய்து நமக்கு அனுப்பிய கடிதத்தில், நிழா புயல் நேற்று கரையைக் கடந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் நாகை மற்றும் பாம்பனுக்கு இடைப்பட்ட பகுதியில் தற்போது மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தற்போது பெய்து வரும் மழை டிசம்பர் மாதம் 2ஆம் தேதி வரை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் இதர பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 17ஆம் தேதி மழை ராஜ் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டது போல நவம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று குறிப்பிட்டிருந்ததைப் போல தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனத்த மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments