Webdunia - Bharat's app for daily news and videos

Install App

95 ஹெக்டேர் நெல் பயிர் சேதம்

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (15:53 IST)
நாகர்கோவில ்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) பெய்த பலத்த மழையால் 95.83 ஹெக்டேரில் நெல் பயிர் சேதமடைந்துள்ளது.

அதே நேரத்தில், சமீபத்தில் பெய்த மழைக்கு நெற் பயிர் சேதமில்லை என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரகுமார் தெரிவித்தார்.

நாகர்கோவிலில், புதன் கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த அக்டோபர் மாதத்தில் பெய்த மழைக்கு 95.83 ஹெக்டேரில் நெல் பயிர் 50 விழுக்காட்டிற்கும் மேல் சேதமடைந்துள்ளது. 10 ஹெக்டேரில் 50 விழுக்காட்டிற்கும் குறைவாக சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 394 விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8526 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி மேற்கொள்ளப்பட்ட ு, அதிகபட்சமாக ஹெக்டேருக்கு 10.75 டன் மகசூல் எடுக்கப்பட்டுள்ளது. 3,230 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது 5,800 ஹெக்டேரில் கும்பப் பூ சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி.!!

மீண்டும் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்ததா? சென்னையில் இன்றைய நிலவரம்..!

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கல் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையா? தீவிர விசாரணை..!

அமித்ஷாவுடன் திமுக எம்பி திருச்சி சிவா திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்.. என்ன சொன்னார் தெரியுமா?

Show comments