Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீராணம் ஏரியிலிருந்து 12,500 கனஅடி நீர் திறப்பு

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (13:41 IST)
சிதம்பரம ்: கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கு செங்கால்ஓட ை, கருவாட்டு ஓடை மற்றும் காட்டாறுகளில ் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

வீராணம் ஏரியிலிருந்து வெள்ளாற்றில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியும ், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ் அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சென்னை குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 75 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

வீராணம் ஏரியின் பாதுகாப்புக் கருதி 45 அடி நீர் தேக்கி வைக்கப்படுகிறது. (அதிகபட்ச உயரம் 47.5 அட ி) ஏரிக்கு கூடுதலாக வரும் 12,500 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இத்துடன் பொன்னேரியிலிருந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இது கருவாட்டுஓடை வழியாக வெள்ளாற்றில் செல்கிறது.

இதனால் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூர ், நடுத்திட்ட ு, எடையார ், செங்கழுநீர்பள்ளம ், வெங்கடேசபுரம ், மடப்புரம ், பிள்ளையார்தங்கல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது.

குமராட்சி அருகே கோப்பாடி மதகிலிருந்து பழைய கொள்ளிடத்தில் 22 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறுவதால், இதன் அருகில் உள்ள நந்திமங்கலம ், வேளக்குட ி, பெராம்பட்ட ு, அகரநல்லூர ், பழையநல்லூர ், ஜெயங்கொண்டப்பட்டினம ், சின்னகாரமேடு உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர் புகுந்தது.

சிதம்பரம ், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் வெள்ளப்பெருக்கெடுத்து 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments