மேட்டூர் அணை தண்ணீர் திறந்து விடுவது குறைப்பு!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (12:35 IST)
திருச்ச ி: மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்காக திறந்து விடப்படும் தண்ணீர் அளவு நேற்று மாலையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

காவிரி பாசன பகுதி விவசாய பணிக்காக, கடந்த இரண்டு வாரங்களாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இது புதன்கிழமை மாலை 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று மேலும் 2 ஆயிரம் கன அடியை குறைத்து, வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி திறந்து விடப்படுகிறது.

மேட்டுர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 72.78 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

அணைக்கு விநாடிக்கு 5,842 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 8,746 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,710 கன அடி, வென்னாற்றில் விநாடிக்கு 7,202 கன அடி, கல்லணை கால்வாயில் விநாடிக்கு 3,004 கன அடி, கொள்ளிடம் கால்வாயில் விநாடிக்கு 1,191 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எகிறும் மாடுகள்!. எஸ்கேப் ஆகும் வீரர்கள்!.. களைகட்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!...

விஜய்யின் உருவம் பொறித்த த.வெ.க கட்சியின் சீருடை எரிப்பு.. போகி பண்டிகையில் சர்ச்சை..!

நலமும் வளமும் பெருகட்டும்!.. தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து!...

பொங்கல் முடித்துவிட்டு சென்னை திரும்ப சிறப்பு ரயில்!.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!...

ஈரானை தாக்கினால் கடும் விளைவு!.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ரஷ்ய அதிபர்...

Show comments