Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காளிங்கராயன் கால்வாய்-தண்ணீர் திறப்பு!

Webdunia
திங்கள், 17 நவம்பர் 2008 (11:31 IST)
ஈரோட ு: காளிங்கராயன் கால்வாய் ஆயக்கட்டு நிலப்பகுதிகளில் இரண்டாம் போகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம ், பவானிசாகர் அணையிலிருந்த ு, காளிங்கராயன் கால்வாய் ஆயக்கட்டு பகுதிகளுக்கு 2008-09 ஆம் ஆண்டுக்கு, முதல்போக பாசனத்துக்காக கடந்த ஜூன் 16 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது நவ. 15 ஆம் தேதி வரை தண்ணீர் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டாம் போக பாசனத்துக்காக நேற்று முதல் தண்ணீர் விடப்பட்டுள்ளது. இது மார்ச் 15 ஆம் தேதி வரை தொடர்ந்து தண்ணீர் விநியோகிக்கப்படும். மார்ச் 16 ஆம் தேதி முதல் வாய்க்காலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த ி, அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் மகேசன்காசிராஜன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments