Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையை மீறி கள்- விவசாயிகள் முடிவு!

Webdunia
திங்கள், 17 நவம்பர் 2008 (10:11 IST)
கோவ ை: தமிழக அரசு கள் இறக்க விதித்துள்ள தடையை மீறி டிசம்பர் 21 ஆம் .தேதி கள் இறக்க விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அதே தினத்தில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளன.

கோவை செஞ்சிலுவைச் சங்கத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் தலைமை என்.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் 5 கோடி தென்னை மரங்களும ், 5 கோடி பனைமரங்களும் உள்ளன. ஆள் பற்றாக்குற ை, விலை பொருள்களுக்கு விலையின்மை போன்ற காரணங்களால் ஏராளமான விவசாயிகள் தென்னை சாகுபடிக்கு மாறியுள்ளனர்.

தென்னை விவசாயம் மூலம் குறைந்த லாபத்தையே விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது. விவசாயிகள் பொருளாதார ரீதியாக மேம்பட தென்ன ை, பனை மரங்களிலிருந்து கள் இறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இந்த அனுமதி கிடைக்கும்பட்சத்தில் நடுத்த தர விவசாயிகள் பலன் பெறுவர்.

தமிழக அரசின் தடையை மீறி டிசம்பர் 21 ஆம் தேதி விவசாயிகள் கள் இறக்குவார்கள். அதே தினத்தில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments