Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை - வானிலை எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2008 (15:12 IST)
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்வதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் பலத்த மழையோ அல்லது மிக பலத்த மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து கிழக்கு தென் கிழக்கே 520 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து பெரும் காற்றழுத்த தாழ்வு மண்டலாக உருப்பெற்றுள்ளது.

ஆந்திரப் பிரதேசம் மசூலிப்பட்டிணத்தில் இருந்து 600 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத் தாழ்வு நிலை, புயலாக உருவாகி வடமேற்கே ஆந்திராவின் கரையோரத்தை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களிலும், ஆந்திராவின் கரையோர மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு, மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் ப‌ல‌த்த காற்று வீசக்கூடும் என்றும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலிற்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு..!

சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை..! வி.சி.க. - காங்கிரஸ் குற்றச்சாட்டு.!!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திருமாவளவன் கண்டனம்..! குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. கமல்ஹாசன் இரங்கல்..!

Show comments