Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி உரம்- விவசாயிகள் முற்றுகை .

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2008 (11:24 IST)
உடுமல ை: போலி உரம் விற்பனை செய்வதாக கூறி, விவசாயிகள் உரக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.


உடுமலை உடுப்பி சாலையில் உள்ள தனியார் உரக் கடையில் உடுமலையை அடுத்துள்ள தாந்தோணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நடராஜ ், புதன்கிழமை 50 கிலோ கலப்பின உரம் 7 மூட்டைகளை வாங்கி மக்காச் சோளப் பயிர்களுக்கு போடும்போது, அது போலி உரம் எனத் தெரியவந்தது.

அந்த உர மூட்டைகளில், புளியங்கொட்ட ை, தேங்காய் மட்ட ை, மரத்தூள ், மஞ்ச ி, கல் போன்றவை கலந்திருந்தன. இதனால் விவசாயி நடராஜ் அதிர்ச்சி அடைந்தார். தால் அதிர்ச்சியடைந்தார்.

இதைத் தொடர்ந்து தாந்தோண ி, சின்னவீரம்பட்ட ி, இந்திரா நகர ், சித்தக்குட்டை உள்ளிட்ட ஊர்களில், போலி உரம் விற்பன செய்வதாக தகவல் பரவியது. இதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள், நேற்று தனியார் உரக்கடையை முற்றுகையிட்டனர்.

உடுமலையில் உரக்கடை உரிமையாளர்கள், விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். போலி உரம் விற்பனை தொடர்பாக உடனடியாக மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளுக்கும், உரக் கடை உரிமையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடுமலை வேளாண் உதவி இயக்குநர் டாம்.பி.சைலஸ், சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் விவசாயிகள் அதிக அளவு கூடியதால், காவல்துறை மாவட்ட துணை கண்காணிப்பாளர் சி.ராசா தலைமையில், காவல்துறையினர் விவசாயிகளை அமைதிப்படுத்தினார்கள்.

பின்னர் இந்த உரங்களைத் தயாரித்த மற்றும் விநியோகித்த நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, இது தொடர்பான விசாரணைகளை சனிக்கிழமை வைத்துக் கொள்வது என்று பேச்சுவார்த்தையில் முடிவானது.

உரக்கடையில் விற்பனை செய்யப்பட்ட உரம் போலியானதா என்பதை உறுதிப்படுத்த, பரிசோதனை கூடத்தில் பரிசோதிக்க அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த விசாரணா முடியும் சனிக்கிழமை வரை உரக்கடையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments