Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை!

Webdunia
10 ஆம் தே‌தி‌யன்று வானிலை காணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தூத்துக்குடிக்கும் நாகைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வலுவடையும் நிலையில் உள்ளது என்று மழைராஜ் கூறியுள்ளார்.

மேகங்களை அடிப்படையாக வைத்து மழை பற்றி ஆய்வு செய்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ் அனு‌ப்‌பியு‌ள்ள ஆ‌ய்வு‌க் கு‌றி‌ப்‌பி‌ல் மே‌ற்க‌ண்டவாறு கூ‌றியு‌ள்ளா‌ர்.

அந்த ஆய்வின்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தூத்துக்குடிக்கும் நாகைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வலுவடையும் நிலையில் உள்ளது.

இது மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளதால் ஓரிரு தினங்களில் நாகை, வேதாரண்யம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கன மழையும், கொடைக்கானல், மதுரை, திருச்சி, கரூர், சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழையும் பெற்ற வாய்ப்புள்ளது.

மேலும் நிலநடுக்க தேதி கணிப்பின்படி நவம்பர் மாத இறுதிக்குள் ஓரளவு சேதம் ஏற்படுத்தும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாய்ப்புள்ள தேதிகள் நவம்பர் மாதம் 13, 26 இவற்றிலிருந்து 3 நாட்கள் வித்தியாசத்திலும் ஏற்படலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments