Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கை விவசாயிகள் சங்கம் தொடக்கம்.

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (09:55 IST)
இயற்கை விவசாயிகள் சங்கம் தொடக்கம்.

புதுச்சேர ி: இரசாயண உரம், பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல், இயற்கையான இடுபொருட்களைக் பயன்படுத்தி பயிர் செய்யும் விவசாயிகள் ஒன்றினைந்து புதுச்சேரி அருகே குருவிநத்தம் என்ற ஊரில் “இயற்கை விவசாயிகள் சங்கம ்” என்ற அமைப்பை துவக்கி உள்ளனர்.

இரசாயண உரம், பூச்சி கொல்லி மருந்துகளை பயன்பயடுத்தாமல், கால்நடை எரு, இலை, தழைகளை மக்கவைத்து உரம் தயாரிக்கப்படுகிறது. இதே போல் பூச்சி கொல்லி மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் நெல், கோதுமை போன்ற தானியங்கள், தேயிலை, காபி, காய்கறி, பழங்களுக்கு அயல்நாடுகளிலும், உள் நாட்டிலும் சிறப்பான விற்பனை வாய்ப்பு உள்ளது. அத்துடன் இவைகளுக்கு அதிக விலையும் கிடைக்கிறது.

இதனால் நாட்டில் பல பகுதிகளில் விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறியுள்ளனர்.

இந்த இயற்கை சாகுபடி விவசாயிகள் ஒருங்கினைந்து சங்கங்களை அமைத்துக் கொள்கின்றனர். இதனால் இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தவும், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் உதவியாக இருக்கின்றது.

இதே மாதிரி சங்கம் புதுச்சேரி அருகே உள்ள குருவிநத்தம் என்ற ஊரில் “இயற்கை விவசாயிகள் சங்கம ் ” என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுற்றுச் சூழல் மற்றும் ஊரக மேம்பாட்டு மையத்தின் அமைப்பாளர் ஆர்.தட்சினா மூர்த்தி திங்கட் கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விவசாயிகள் கடந்த ஒரு வருடமாக இயற்கை உரம், பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தி நெல் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இவர்கள் இராசயண பூச்சி கொல்லி மருநதுக்கு பதிலாக, இயற்கை பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்துகின்றனர். இதனால் நிலத்தின் இயற்கை தன்மையும் பாதுகாக்கப்படுகிறது.

இரசாயண பொருட்களை பயன்படுத்தி விவசாயம் செயது வந்த விவசாயிகள். இயற்கை வேளாண் முறைக்கு மாறும் போது, ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு உற்பத்தி குறையும். அதற்கு பிறகு உற்பத்தி அதிகரிக்க துவங்கிவிடும்.

இன்று, இந்த சங்கத்தை முதலமைச்சர் வி.வைத்தியலிங்கம் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் ஆர்.ராதாகிருஷ்ணன், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்... ஒரே மாதத்தில் 2 முறை கொலை முயற்சி?

சென்னைக்கு ஒரு வாரம் மழை இல்லை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை..!

ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரி கைது.. சென்னை போலீசார் அதிரடி..!

Show comments