கரும்பு பற்றாக்குறை-சர்க்கரை ஆலைகள் மூடல்!

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (16:00 IST)
கோலாபூர ்: கரும்பு பற்றாக்குறையால் மாகராஷ்டிராவில் 50 க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் அதிக அளவு சரக்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு அரசு, கூட்டுறவு, தனியாரைச் சேர்ந்த சர்க்கரை ஆலைகள் நூற்றுக் கணக்கில் உள்ளன.

இந்த அரவை பருவத்தில், கரும்பு கிடைக்காததால், 50 க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகள் இயங்காமல் இருக்கும் என்று மகாராஷ்டிர மாநில சர்க்கரை துறை ஆய்வாளர் ராஜகோபால் திவேரா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இதனால் 30 முதல் 40 விழுக்காடு வரை சர்க்கரை உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.

சர்க்கரை ஆலைகளுக்கு தேவைப்படும் மொத்த கரும்பில், 50 விழுக்காட்டிற்கும் குறைவாக கரும்பு கிடைத்தால், அரவைக்கான அனுமதி அளித்தால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இதனால் ஆலைகளின் மொத்த தேவையில் 50 விழுக்காட்டிற்கும் அதிக அளவு கரும்பு கிடைத்தால் மட்டுமே, அரவைக்கு அனுமதி அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்யும் கரும்புக்கு, அரசு அறிவித்துள்ள விலை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!

இன்னும் 100 வருஷம் ஆனாலும் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வராது.. கடைசி வரை அடிமையாக இருங்க.. தவெகவினர் கிண்டல்..!

அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளையும் தாக்குவோம்.. அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்..!

இந்தியாவின் விருந்தினரை தாக்குவதா?!.. திமிருக்கு முடிவு கட்டுவோம்!.. அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்..

ஆஃபர் கொடுத்து கூட்டணிய உடைக்க பார்த்தாங்க!... தவெகவை தாக்கிய ஸ்டாலின்!...

Show comments