Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்கறி விதைகள் மானியத்தில் விநியோகம்!

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2008 (15:30 IST)
மதுர ை : மதுரை மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ ், காய்கறி விதைகள் 50 விழுக்காடு மானியத்தில் விநியோகிக்கப்படுவதாக தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.

இதன் துணை இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிகேஎம் 1 சான்று பெற்ற தக்காளி விதைகளும ், வீரிய ஒட்டுரக வெண்டை விதைகளும் தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள ், அந்தந்தப் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ள வேண்டும். இதற்கு தேவையான விண்ணப்பத்தில் இடுபொருள் தேவை விவரத்தைப் பூர்த்திசெய்து விதைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

மதுரை மாவட்டத்துக்கு இத்திட்டத்திற்காக ரூ. 3.58 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 711 ஹெக்டர் நிலப்பரப்பில் பயிரிட தகுந்தாற் போல் பரப்புக்கு காய்கறி விதைகள் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்... ஒரே மாதத்தில் 2 முறை கொலை முயற்சி?

சென்னைக்கு ஒரு வாரம் மழை இல்லை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை..!

ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரி கைது.. சென்னை போலீசார் அதிரடி..!

Show comments