Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க மானியம்!

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2008 (14:08 IST)
தஞ்சாவூர ்: தஞ்சாவூர் மாவட்டத்தில் திறந்த வெளி பாசன கிணறுகள் மூலம் நிலநீரை செறிவூட்டும் திட்டத்திற்கு மானியக் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைந்துள்ள குழு மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பனந்தாள ், திருவிடைமருதூர ், கும்பகோணம ், அம்மாபேட்ட ை, திருவையாற ு, மதுக்கூர ், திருவோணம் ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

மத்திய அரசால் வடிதொட்டி கட்டுமானத்திற்காக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முழு மானியமாக ரூ. 4,000, பெரிய விவசாயிகளுக்கு ரூ.2,000 மானியமாக மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த மானியம் நபார்டு வங்கி மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக சேர்க்கப்படும்.

எனவ ே, திறந்த வெளி பாசனக் கிணறுகள் உள்ள நில உரிமையாளர்கள் தஞ்சாவூர் நிலநீர் கோட்ட செயல்பொறியாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் பெற்ற ு, தங்கள் கிணறு அமைந்துள்ள நிலத்தின் பட்ட ா, அடங்கல் மற்றும் வங்கி புத்தக முதல் பக்க நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லில இருந்து அமெரிக்காவுக்கு போக 40 நிமிடம்தான்! - ‘வேல்’ சூர்யா பாணியில் இறங்கிய எலான் மஸ்க்!

துப்பாக்கி வேல செய்யல இக்பால்..? கவுன்சிலரை சுட வந்தவருக்கு நடந்த ட்விஸ்ட்! - வைரலாகும் வீடியோ!

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்... ஒரே மாதத்தில் 2 முறை கொலை முயற்சி?

சென்னைக்கு ஒரு வாரம் மழை இல்லை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Show comments